திருப்பரங்குன்றம் மலை தீபம் வழக்கு: "குன்றில் தீபம் ஏற்றுவோம்" டீ சர்ட் அணிந்து பிரச்சாரம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலைத் தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோரி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர், "குன்றில் தீபம் ஏற்றுவோம்" என அச்சடித்த டி சர்ட்டை அணிந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பாஜகவை சேர்ந்த ராமரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத் தூணில் விளக்கேற்ற உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி தீபத்திருவிழாவின் போது கோயில் நிர்வாகத்தினர் வழக்கமாக ஏற்றும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே இருக்கும் தீபத்தில் விளக்கேற்றினர்.
இதனால் திருப்பரங்குன்றத்தில் பாஜக, இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அங்கிருந்த போலீஸாரின் தடுப்புகளை உடைத்தெறிந்தனர். இந்த நிலையில் ராமரவிக்குமார், கோயில் நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உள்ளூர் மக்கள், உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று உண்ணாவிரதம் இருந்தனர். வீடுதோறும் தீபம், கொடியேற்றி வழிபட்டு வருகிறார்கள்.
அதே சமயம், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினரும் தீபம் ஏற்ற வலியுறுத்தி பல வகைகளில் பிரச்சாரம் செய்து வருவது மக்களை ஈர்த்து வருகிறது. இந்து முன்னணியினர் கூறுகையில், திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதற்கு பொதுமக்களிடையே எத்தனை ஆதரவு உள்ளது என சமூகவலைதளத்தில் ஓட்டெடுப்பு நடத்தி வருகிறோம்.
நாங்கள் எதிர்பார்த்ததை விட ஆதரவு அதிகரித்து வருகிறது. தவிர, ஒவ்வொருவரும் "குன்றில் தீபம் ஏற்றுவோம்" என அச்சிடப்பட்ட டி-சர்ட்டை அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அது போல் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களிலும் டிஸ்ப்ளேக்களிலும் "அங்கேயே தீபம் ஏற்றுவோம்" என வாசகத்துடன் கூடிய படங்களை வைத்துள்ளோம். இதை ஒவ்வொருத்தரும் செய்தால்தான் நிச்சயம் முருகன் அருளால் தீபம் ஏற்றும் கட்டாயத்திற்கு திமுக அரசு வரும் என தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications