மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ் வளர்த்த மதுரை.. மாஸ்க் போண்டா சுட்டு.. கொரோனா தோசை வார்த்து.. விழிப்புணர்வை ஊட்டுது பாருங்க!

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் உள்ள ஒரு உணவகத்தில் மாஸ்க் பரோட்டா மட்டுமல்லாமல் கொரோனா தோசை, கொரோனா போண்டா என விற்பனை அமோகமாக உள்ளது. தமிழ் வளர்த்த மதுரை தற்போது விழிப்புணர்வையும் வளர்க்கிறது.

Recommended Video

    கொத்து, வீச்சு புரோட்டான்னு பார்த்திருப்பீங்க.. மாஸ்க் புரோட்டாவை பார்த்திருக்கீங்க? அசத்தும் மதுரை

    கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் அணியுங்கள் என்பது உலகில் ஒவ்வொரு மனிதரும் உச்சரிக்கும் ஒரு சொல்லாக மாறிவிட்டது. இன்று மாஸ்க் இல்லாமல் அஜாக்கிரதையாக செல்வோரை விரல் விட்டு ண்ணிவிடலாம்.

    அந்த அளவுக்கு மோசமான இந்த கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் மதுரைவாசிகள் அதனையும் டேக் இட் ஈசியாக எடுத்து கொள்ளும் வகையிலும், முக கவசங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உணவு வகைகளை தயார் செய்து வருகிறார்கள்.

    கொத்து, வீச்சு புரோட்டான்னு பார்த்திருப்பீங்க.. மாஸ்க் புரோட்டாவை பார்த்திருக்கீங்க? அசத்தும் மதுரை கொத்து, வீச்சு புரோட்டான்னு பார்த்திருப்பீங்க.. மாஸ்க் புரோட்டாவை பார்த்திருக்கீங்க? அசத்தும் மதுரை

    சுடச்சுட

    சுடச்சுட

    தமிழ் வளர்த்த மதுரையில் 24 மணி நேரமும் சுடச்சுட மதுரை மண் வாசம் கமழும் உணவுகளுக்கு பஞ்சமில்லை. நள்ளிரவு 1 மணி, 2 மணியாச்சே மதுரையில் இறங்கினால் உணவுக்கு என்ன செய்வது என்ற கவலையே வேண்டாம். அந்தளவுக்கு தூங்கா நகரமான மதுரையில் எந்த நேரத்திலும் சுவையான உணவு கிடைக்கும்.

    விற்பனை

    விற்பனை

    சுவையான உணவை கொடுக்கும் போது விழிப்புணர்வையும் தருவதில் மதுரை மக்களுக்கு நிகர் அவர்களே! ஆம் பரோட்டாவிற்கு பெயர் பெற்ற மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள டெம்பிள் சிட்டி என்ற உணவகம் ஒன்றில் முக கவசம் போன்ற பரோட்டா தயாரிக்கப்படுகிறது. அத்துடன் கொரோனா வைரஸ் வடிவிலான ரவா தோசையும், கொரோனா வடிவிலான வெங்காய போண்டாவும் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனாவில் இருப்பது போல சுத்தி குட்டி குட்டி ரவுண்டு உள்ளன. அது போல் வெங்காய போண்டாவிலும் மாஸ்க் போல தோற்றத்தை ஏற்படுத்த இருபுறத்திலும் காது போன்ற வளைவை வைக்கிறார்கள்.

    மூலிகை ரசம்

    மூலிகை ரசம்

    இதனை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதேபோன்று கொரோனா பரவல் காலம் என்பதால் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்க வாடிக்கையாளர்களுக்கு மூலிகை ரசமும், கபசுரக் குடிநீரும் வழங்கப்படுகிறது. விழிப்புணர்வு முயற்சியாக தயாராகும் மாஸ்க் பரோட்டா 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    உரிமையாளர் தகவல்

    உரிமையாளர் தகவல்

    இதனை குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் விரும்பி வாங்கிச் செல்வதாக உணவக உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதோ பரோட்டா போட்டோமா, சால்னாவை ஊத்தினோமா, அதை வாடிக்கையாளர்கள் ஊறவைத்து திங்க வைத்தோமா என இல்லாமல் சமூக பொறுப்புணர்வு கொண்டுள்ள இந்த மேதைகள் எப்போதும் பாராட்டுக்குரியவர்களே!

    English summary
    Hotel Temple city in Madurai prepares Corona Dosai and Mask Bonda to create awareness among people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X