மதுரை தெற்கு தாசில்தார் ராஜபாண்டி சிக்கியது எப்படி.. கலெக்டர் அலுவலக வளாகத்தில் டிரைவரால் சம்பவம்
மதுரை: மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் கிரஷர் வைப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். ஆனால் மதுரை தெற்கு தாசில்தார் ராஜபாண்டி ரஷர் வைக்க அனுமதி அளிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் 70 ஆயிரம் தருவதாக கூறி பேரம் பேசினாராம். ஆனால் இறுதியாக லஞ்சம் கொடுக்க விரும்பாமல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். தாசில்தார் ராஜபாண்டியை, கலெக்டர் ஆபீஸி வளாகத்திலேயே வைத்து போலீசார் கைது செய்தனர். அவரது டிரைவரால் சிக்கியுள்ளார்.
அரசு ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டால், லஞ்சம் தரத்தேவையில்லை.. விஏஓ, நில அளவையர், தாசில்தார், நகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் என எந்த அரசு ஊழியர் லஞ்சம் கேட்டாலும் அவர்கள் மீது மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். லஞ்சம் கேட்டதற்கான ஆதாரங்களை சமர்பித்தால், அவர்களை கையும் களவுமாக பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். அதன்படி தான் பல்வேறு அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக கைதாகி வருகிறார்கள். அப்படித்தான் மதுரையில் சம்பவம் நடந்துள்ளது.

ஆய்வு செய்த தாசில்தார்
மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் என்பவர் குசவபட்டி கிராமத்தில் கிரஷர் வைப்பதற்காக விரும்பியுள்ளார். இதற்காக ரஞ்சித் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இது போல் கிரஷர் வைக்க வேண்டும் என்றால், தாலுகா தாசில்தார் ஆய்வு நடத்துவது வழக்கம். அந்த வகையில் (மதுரை தெற்கு) தாசில்தார் ராஜபாண்டி நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ராஜாபாண்டி கிரஷர் வைக்க அனுமதி அளிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
70 ஆயிரம் லஞ்சம்
அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்று ரஞ்சித் கூறினாராம். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.70 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரஞ்சித், இதுகுறித்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, ரமேஷ்பிரபு, பாரதிபிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். புகாரின் உண்மை தன்மையை உறுதி செய்த பின்னர் ரஞ்சித்திடம் ரசாயனம் தடவிய ரூ.70 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
பணத்துடன் கலெக்டர் ஆபீஸ் சென்றார்
அவர் பணத்துடன் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தெற்கு தாசில்தார் அலுவலகத்திற்கு ரஞ்சித் சென்றுள்ளார். மேலும் தான் பணத்துடன் வந்திருப்பதாக தாசில்தார் ராஜபாண்டியிடம் கூறினாராம். உடனே அவர் பணத்தை டிரைவர் ராம்கியிடம் கொடுக்குமாறு கூறினார். அப்போது ரஞ்சித்திடம் இருந்து டிரைவர் ராம்கி பணத்தை வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications