மக்கள் கடல்.. மதுரையில் மாஸ் காட்டிய எஸ்டிபிஐ! பெரிய கட்சிகளுக்கு இணையான கூட்டம் வர காரணம் என்ன?
மதுரை: எஸ்டிபிஐ கட்சி நேற்று மதுரையில் நடத்திய 'வெல்லட்டும் மதச்சார்பின்மை' மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளை ஏற்படுத்தி உள்ள நிலையில், பெரும் கட்சிகளுக்கு இணையான கூட்டம் எஸ்டிபிஐ மாநாட்டில் கூடியது எப்படி என்று பார்ப்போம்.
எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று மதுரையில் 'வெல்லட்டும் மதச்சார்பின்மை' என்ற பெயரில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கடந்த பல நாட்களாக அக்கட்சி மேற்கொண்டு வந்தது. எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 'வெல்லட்டும் மதச்சார்பின்மை' மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்தார். மாநாட்டு அழைப்பிதழில் நாடாளுமன்ற புகைப்படம் மற்றும் நெல்லை முபாரக் புகைப்படத்துடன் எடப்பாடி பழனிசாமியின் படமும் அச்சிடப்பட்டு இருந்தது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளை எஸ்டிபிஐ கட்சியினர் சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்கள். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளை சேர்ந்த கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்களை திரட்டுவதற்கு எஸ்டிபிஐ முடிவு செய்தது. அப்போதே அந்த அழைப்பிதழ் விவாதப் பொருளை ஏற்படுத்தியது. அழைப்பிதழில் நாடாளுமன்ற புகைப்படத்துடன் நெல்லை முபாரக், எடப்பாடி பழனிசாமி படமும் அச்சிடப்பட்டு இருந்தது 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கான அறிகுறியாக என்ற கேள்வி எழுந்தது.
பாஜகவுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து கூட்டணியைவிட்டு வெளியில் வந்த பின்னர், பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு, இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தீர்மானம் கொண்டு வந்தது போன்ற நகர்வுகளை அதிமுக மேற்கொண்டது. இதனை அடுத்து அதிமுகவுடன் எஸ்டிபிஐ கட்சியும் தொடர்ந்து நெருக்கம் காட்ட தொடங்கியது. சிறைவாசிகள் விடுதலைக்கு அதிமுக தீர்மானம் கொண்டு வந்த பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எஸ்டிபிஐ கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நன்றி கூறினர்.
எஸ்டிபிஐ மாநாடு தொடர்பாக சமூக வலைதளங்களில் அக்கட்சி வெளியிட்ட பதிவுகளுக்கு கீழ் கலவையான விமர்சனங்கள் இஸ்லாமியர்களிடம் இருந்து வந்தன. பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகள் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு, வண்ணாரப்பேட்டை ஷாகின் பாக் தடியடி போன்றவற்றை சுட்டிக்காட்டி விமர்சனங்களை முன்வைத்தார்கள். இந்த நிலையில் நேற்று மாநாடு மதுரையில் மிக பிரமாண்டமாக் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் மூலம் கட்சித் தொண்டர்களை எஸ்டிபிஐ அழைத்து சென்று இருந்தது. திமுக, அதிமுக ஆகிய தமிழ்நாட்டின் பெரும் கட்சிகளுக்கு இணையான கூட்டத்தை எஸ்டிபிஐ கட்சி நேற்றைய மாநாட்டில் கூட்டி இருந்தது. அதில் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசியது, எஸ்டிபிஐயுடன் கூட்டணி அமையும் வாய்ப்பு இருப்பதாக சூசகமாக கூறியது என அனைத்தும் தற்போது பேசப்பட்டு வருகிறது.
இவ்வளவு கூட்டத்தை எஸ்டிபிஐ கூட்டியது எப்படி என்பதும் பலரது கேள்வியாக இருக்கிறது. இது பற்றி நாம் கூட்டத்துக்கு சென்ற எஸ்டிபிஐ கட்சி அல்லாதவர்களிடம் விசாரித்தபோது, பல்வேறு காரணங்களை அடுக்கினார்கள். இந்த மாநாட்டுக்கு சென்ற திமுகவின் தீவிர ஆதரவாளர் பேசுகையில் நடந்து வரும் அரசு இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி தங்களிடம் இருப்பதாக கூறினார். மற்றொரு நபர் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தை சுட்டிக்காட்டி திமுகவை விமர்சித்தார்.
புயல், வெள்ள, கொரோனா பேரிடர் காலங்களில் எஸ்டிபிஐ கட்சி பல்வேறு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை செய்வதாகவும், சிஏஏ உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடி வருவதையும் சுட்டிக்காட்டி இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றதாக இளைஞர்கள் தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக ஒருவர், "வரும் மக்களவைத் தேர்தலிலும் நான் திமுக கூட்டணிக்கே வாக்களிப்பேன். அதே நேரம் அதிமுகவையும் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. இல்லாவிட்டால் மேற்கு வங்கம் போல 2 வது இடத்துக்கு பாஜக வந்துவிடும். எனவே இந்த கூட்டத்துக்கு சென்று என்னுடைய ஆதரவை தெரிவித்தேன்." என்றார்.
இப்படி நினைத்துப் பார்க்க முடியாத பல்வேறு கணக்குகளை மக்களும் போட்டுக்கொண்டுதான் மதுரை எஸ்டிபிஐ மாநாட்டுக்கு சென்று இருக்கிறார்கள்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications