உசிலம்பட்டியில் கோழி கறி வாங்க ஐந்து பைசாவுடன் அலைமோதும் மக்கள்! நடந்த அதிசயம்
மதுரை: உசிலம்பட்டியில் தனியார் கோழி இறைச்சிக்கடை திறப்பு விழா சலுகையாக ஐந்து பைசாவிற்கு ஒருகிலோ கோழி இறைச்சி விற்பனை, ஐந்து பைசா நாணயத்துடன் கோழிக்கறி வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
Recommended Video

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் பிராய்லர் கோழி இறைச்சிக்கடை நிறுவனம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் புதிய கிளையை இன்று திறந்தது.

இந்த கடையின் திறப்புவிழாவை முன்னிட்டு திறப்பு விழா சலுகையாக ஐந்து பைசாவிற்கு ஒரு கிலோ கோழி கறி வழங்கப்படும் என போஸ்டர் அடித்து உசிலம்பட்டி முழுவதுமாக ஒட்டப்பட்டது.

இன்று திறப்பு விழாவின் போது நூற்றுக்கணக்கான மக்கள் ஐந்து பைசா நாணயத்துடன் கோழிக்கறி வாங்க குவிந்தனர். இதனால் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தையும், பொதுமக்கள் கூட்டத்தையும் கட்டுப்படுத்தினர்.

பழைய நாணயங்களை பாதுகாக்கும் முயற்சியில் அறிவிக்கப்பட்டது.
இந்த சலுகையால் ஒரு சிலரிடம் மட்டுமே இந்த ஐந்து பைசா நாணயம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் ஐந்து பைசா நாணயத்துடன் குவிந்தது இன்னும் கிராம மக்கள் பழமை மாறாமல் உள்ளதை காட்டுவதாக கடையின் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.













Click it and Unblock the Notifications