அப்பாவுக்கு லேசான மயக்கம் தான்! பயப்பட ஒன்றுமில்லை! பரபரப்பை தணித்த ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ.!
மதுரை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக் குறைவு காரணமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நலம் பற்றிய பேச்சு திண்டுக்கல் மாவட்ட திமுகவினரிடையே தீவிரமாக உள்ளது.
இதனிடையே அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு என்னாச்சு என்பது பற்றி அறிய அவரது மகனும் பழநி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமாரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது, '' அப்பாவின் உடல்நலம் பற்றி பயப்பட ஒன்றுமில்லை, சர்க்கரை அளவு லேசாக குறைந்துவிட்டது. இது புதிதல்ல, அவ்வப்போது அவருக்கு வரும் பிரச்சனை தான்.''

''சுகர் லெவலில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக வந்த மயக்கமே தவிர வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. ஓரிரு நாட்களில் மருத்துவமனையிலிருந்து அப்பா வீடு திரும்பி விடுவார்.'' என்று தெரிவித்தார். இதன் மூலம் அமைச்சர் ஐ.பெரியசாமி நலமுடன் இருப்பதையும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்பதையும் அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனால் அமைச்சர் ஐ.பெரியசாமியின் உடல்நலம் குறித்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அமைச்சரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு சென்ற கட்சிக்காரர்களுக்கு நேற்றும், இன்றும் அனுமதி தரப்படவில்லை. நாளை ஒரு வேளை அனுமதி கொடுக்கப்படலாம். குடும்ப உறுப்பினர்களுக்கே இன்று தான் அனுமதி தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான காரணம் பற்றி மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்த போது, ஓய்வெடுக்கும் போது அமைச்சரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதே காரணம் தவிர வேறு ஒன்றுமல்ல என பதில் கிடைத்தது.
இதனிடையே அமைச்சர் ஐ.பெரியசாமியை பொறுத்தவரை அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் எப்போதுமே மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் ஒரே வயது என்பதும் ஸ்டாலினை விட மூன்று மாதம் மூத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications