Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டு மனை பட்டா.. சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன முக்கியமான விஷயம்.. பல ஏழைகளுக்கு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: இன்றைக்கு பல ஏழை எளிய மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கின்றனர். அரசு பரிசீலனை செய்து, நிலம் இல்லாத மட்டும் வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வருகிறது. இந்நிலையில் ஏழைகள் பலர் வீடு இல்லாமல் அவதிப்படும்போது, சொத்து வரி செலுத்துபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது ஏன்? என மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. அண்மையில் வழக்கு ஒன்றில் இதுபற்றி உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம்.

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பலரும் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கே கிடைக்கிறது. சிலருக்கு வீட்டு மனை பட்டா என்பது கவனமாக இருக்கிறது. இந்நிலையில் மதுரை திருமங்கலம் தாலுகா உச்சப்பட்டி பகுதியை சேர்ந்த வெற்றிவேல், மதுரை ஐகோர்ட்டில் 2019-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், 'உச்சப்பட்டி-தர்மத்துப்பட்டியில் உள்ள அரசு நிலத்தில் வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு கடந்த 2013-ம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Important things said by the Madras High Court regarding housing land patta deeds

அதன் பேரில் 49 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி திருமங்கலம் தாசில்தார் உத்தரவிட்டிருந்தார். ஆனால் 49 பேர்களில் ஒருவரை தவிர மற்ற அனைவருக்கும் சொந்த வீடு உள்ளது. அவர்களிடம் தலா ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு இலவச பட்டா வழங்கி உள்ளார்கள். எனவே 49 பயனாளிகளை தேர்வு செய்ததில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.

எனவே தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாக்களை ரத்து செய்துவிட்டு, சம்பந்தப்பட்ட நிலத்தில் நூலகம், கூடுதல் பள்ளி கட்டிடம், ரேஷன் கடை ஆகியவை கட்டித்தர உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு கடந்த மூன்று நாள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல்கள் ஆஜராகி, இது சம்பந்தமாக ஏற்கனவே உரிய ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
அதற்கு மனுதாரர் வக்கீல் பாபு ராஜேந்திரன் ஆஜராகி, இலவச வீட்டு மனை பட்டா பெற்ற 48 நபர்களின் பெயர் விவரங்களும் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சொத்து வரி செலுத்தும் நபர்கள் என்பதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு இருக்கிறது. அதிகாரிகளின் தவறான நடவடிக்கையே தகுதியான நபர்களுக்கு வீட்டுமனை கிடைக்காததற்கு காரணம் என வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது ஏன்? எத்தனையோ ஏழைகள் வீடு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள் பயன் பெறுவதற்காகவே இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறது. இதுபோன்ற விதிமீறல்கள் காரணமாக தகுதியான நபர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர் என நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், இதே போன்ற விவகாரங்கள் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டிலும் ஏராளமாக நிலுவையில் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரிகள் இது சம்பந்தமாக ஆய்வு செய்து 2 வாரத்தில் இந்த நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+