Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷூ போடாதது ஒரு குத்தமா? மதுரையில் மாணவனை காட்டுமிராண்டிதனமாக தாக்கிய பள்ளி நிர்வாகி! கண்ணில் காயம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை கே.புதூரில் உள்ள தனியார் பள்ளியில், ஷூ அணிந்து வராததற்காக 6ஆம் வகுப்பு மாணவன் மீது பள்ளி நிர்வாகி ஷகீத் என்பவர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் மாணவனின் கண்பார்வையே கேள்விக்குறியாகும் வகையில் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை கே.புதூர் அல் அமீன் நகரை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவரது மகன் பஹியா அதே பகுதியில் இயங்கி வரும் ஜன்னா பப்ளிக் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் மழையின் காரணமாக ஷூ அணிந்து செல்வதற்கு பதிலாக பள்ளிக்கு செப்பல் அணிந்து சென்றிருக்கிறார் மாணவன் பஹியா. இதற்கு ஆசிரியர்களே எதுவும் சொல்லாத நிலையில் பள்ளியின் அலுவலக நிர்வாக பொறுப்பாளர் ஷகீத் என்பவர், ஏன் ''ஷூ'' அணிந்து வரவில்லை எனக் கேட்டு மாணவன் பஹியாவின் கன்னத்தில் ஓங்கி பலமாக அடித்திருக்கிறார்.

In a private school in Madurai K.Pudur, a 6th class student was brutally assaulted by the school administrator Shaheed for not wearing shoes

இதில் மாணவன் பஹியாவின் கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வையே பறிபோகும் அளவுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். மேலும், ஆசிரியர் அல்லாத ஒருவர், பள்ளியின் அலுவலக நிர்வாக பொறுப்பாளராக இருப்பவர் எப்படி தங்கள் மகனை அடிக்கலாம் அவருக்கு யார் அந்த உரிமையை வழங்கியது என பள்ளி நிர்வாகத்திடம் மாணவன் பஹியாவின் தந்தை கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதற்கு நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செல்லுங்க, எங்களை ஒன்றும் செய்ய முடியாது, முடிந்ததை பாருங்க என ஆணவத்துடன் ஷகீத் பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் அளித்த புகார் மீது பள்ளி தாளாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே மதுரை மாவட்ட தனியார் பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவை தொடர்பு கொண்டு, பள்ளியில் ஆசிரியராக இல்லாத ஒருவர் மாணவனை அடிக்கலாமா என்பது பற்றி விளக்கம் கேட்டோம்.

அப்போது அவர் கூறியதாவது, ''மாணவனின் தந்தை அளித்த புகார் குறித்து இன்று காலை பள்ளியில் விசாரணை நடத்தவிருக்கிறோம். நானே நேரடியாக விசாரணை நடத்தவுள்ளேன். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.'' எனக் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+