பதவியேற்ற கையோடு சுவர் ஏறி குதித்து தப்பியோடிய கவுன்சிலர்.. காரணத்தை கேட்டா சிரிச்சிடுவீங்க
மதுரை: மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சியில் பதவியேற்ற கையோடு கவுன்சிலர் ஒருவர் சுவர் ஏறி குதித்து தப்பியோடிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்திவிட்டன.
பொதுவாக பொது தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி அந்த தேர்தலில் அந்தந்த மாநிலத்தில் உள்ள கட்சிகள் தனியாகவும் கூட்டணி அமைத்தும் போட்டியிடும்.
அது போல் இந்த பலம் வாய்ந்த கட்சிகளுடன் சுயேச்சையாக வேட்பாளர்களும் போட்டியிடுவது வழக்கம்.

வெற்றி
தோற்போம் என தெரிந்தே சிலர் போட்டியிட்டு என்றாவது ஒரு நாள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் போட்டியிடுவர். அது போல் சில இடங்களில் சுயேச்சைகளுக்கு ராசியாகி வெற்றி பெறுவதும் நடந்துள்ளது.

சுயேச்சைகள் வெற்றி
அந்த வகையில் இந்த முறை நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் ஏராளமான சுயேச்சைகள் காட்டில் மழை பெய்துள்ளது. ஆம் இந்த முறை சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

அரவிந்த்
சில ஊராட்சிகளில் தலைமை வகித்த அதிமுக, திமுகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த இரு கட்சிகளும் சுயேச்சைகளின் ஆதரவை நாடியுள்ளன. அந்த வகையில் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் 8-ஆவது வார்டு கவுன்சிலராக சுயேச்சை வேட்பாளர் அரவிந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஆனந்த் பதவியேற்றார்
இந்த நிலையில் இந்த ஒன்றியத்துக்கான தலைவர் பதவியை பிடிக்க முடியாமல் அதிமுகவும் திமுகவும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவை பெற முயற்சிக்கின்றனர். இன்றைய தினம் சுயேச்சை கவுன்சிலர் ஆனந்த் பதவியேற்றார். மொத்தம் 16 ஒன்றியக் கவுன்சிலர்களில் அதிமுக கூட்டணியில் 9 பேரும் திமுக சார்பில் 6 பேரும், சுயேட்சையாக கோவிலாங்குளம் ஒன்றியக்கவுன்சிலராக (8-வது வார்டு) அரவிந்த் என்பவரும் பதவியேற்றனர். இந்நிலையில் அரவிந்த்தை திமுகவினர் கடத்தப்போவதாக தகவல் கிடைத்தது.

கிராக்கி
பொறியியல் பட்டதாரியான இவர் பதவியேற்ற கையோடு அதிமுக, திமுகவிடையே சிக்காமல் இருக்க சுவர் ஏறி குதித்து தப்பியோடினார். பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த காரில் ஏறி உட்கார்ந்தவுடன் கார் பறந்து சென்றது. சுயேச்சைகளுக்கு இத்தனை கிராக்கியா என அவ்வழியே சென்றவர்கள் விழி ததும்பி நின்றனர்.












Click it and Unblock the Notifications