செங்கல் பிடிக்கப்போறாரா? அண்ணாமலை என்னன்னமோ சொல்றாரு... நீங்க வேற - அமைச்சர் பி.மூர்த்தி
மதுரை: லுலு மால் கட்ட செங்கலை மூட அனுமதிக்க மாட்டேன் என்று பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணமலை போய் செங்கல்லை பிடிக்கப்போகிறாரா? என அமைச்சர் பி.மூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
மதுரையில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஓராண்டு காலத்தில் அத்தனை துறையிலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தந்துள்ளோம்.
கோடிக்கணக்கானை நிதி மூலம் தொழிற்சாலைகளை உருவாக்கி இருக்கிறோம். என்னென்ன செய்தோம் என்பதை ஆதாரப்பூர்வமாக முதல்வர் சட்டப்பேரவையில் விளக்கினார்.

ஒரே ஆண்டில் செய்தோம்
பத்தாண்டு காலம் செய்ய முடியாததை ஓராண்டு காலத்தில் செய்துள்ளோம். எந்தந்த வகையில் இடையூறு செய்தாலும் அதையெல்லாம் முறியடித்து ஓராண்டு காலத்தில் முதல்வர் பணி செய்துள்ளார். ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய மின் பகிர்வை கொடுக்கவில்லை. இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின் பகிர்வு பற்றாக்குறை குறித்து முதல்வர் தெளிவாக சட்டப்பேரவையில் விளக்கியுள்ளார்.

அண்ணாமலை செங்கல் பிடிப்பாரா
வாய்க்கு வந்தபடி எதை வேண்டுமானாலும் பேசலாம். நல்லது செய்ய வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்தை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவர் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் தெரிந்துகொண்டே தெரியாதது போல பேசுகிறார். லுலு மால் கட்ட ஒரு செங்கல்லை கூட அனுமதிக்க மாட்டோம் என்ற அண்ணாமலையின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பி.மூர்த்தி, "ஏன் செங்கல்லை அவர் பிடிக்க போகிறாரா? இல்ல செங்கல் செய்யப்போகிறாரா? அண்ணாமலை என்னென்னமோ சொல்கிறார். நீங்க வேற..

இலங்கைக்கு உதவி
இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் தொப்புள்கொடி உறவாக உதவிகளை செய்ய தீர்மானம் நிறைவேற்றி முன்வந்தவர் முதல்வர். வாயில் சொல்வது எளிது ஆனால் சொன்னதை செய்பவர் முதல்வர். தமிழக முதல்வரால் தான் தமிழக மக்களுக்கு செய்ய முடியும். தமிழ்நாடு பங்கீட்டு நிதியில் ரூ.1 பெற்றுக்கொண்டு 35 பைசாவை கொடுக்கின்றனர்.

கடனை அடைக்கிறோன்
வணிகவரித்துறையில் முழுமையான வரி வருவாய் கிடைத்தாலே அதைவைத்து தமிழக அரசு அதிகமாக சேவை செய்யும். தமிழக பணத்தை பெற்றுக்கொண்டு அதை திருப்பிக்கொடுக்காமல் இதை செய்வோம் அதை செய்வோம் என சொல்வது வெறும் பேச்சு மட்டுமே. இன்னும் மத்திய அரசு தமிழகத்து ரூ.28 ஆயிரம் கோடியை இன்னும் தரவில்லை. பத்தாண்டுகளில் 6 லட்சம் கோடி கடன் வைத்து சென்றுவிட்டார்கள். அதற்கு வட்டியும், கடனும் கட்டி வருகிறோம்." என்றார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications