சான்ஸ் இருக்கா? தூது அனுப்பிய எடப்பாடி.. பலரிடம் பேசி பார்த்த ஓபிஎஸ்! ஆஹா.. கிரீன் சிக்னல் தந்த மோடி
மதுரை: பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வர உள்ள நிலையில் அவரை ஓ பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனி தனியாக சந்திக்க உள்ளனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்னும் தீர்வு காணப்படவில்லை. இதனால் அதிமுகவிற்குள் கடுமையான உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. கடந்த முறை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.
அப்போது ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைத்த வாதத்தில், அதிமுக சட்ட விதிப்படி பொதுக்குழு கூடவில்லை. அதிமுக சட்ட விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

அதிமுக விதி
விதியை மீறி பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். தலைமை கழகம் பொதுக்குழுவை கூட்ட முடியாது, என்று கூறினார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை உச்ச நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது. அதன்படி பொதுக்குழு வழக்கில் அடுத்த விசாரணை அல்லது உத்தரவு வரும் வரை தற்போது நிலை நீடிக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த கூடாது. இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்ததும் உடனே.. எடப்பாடியிடம் இது உறுதியா என்று கேட்டனர்.

கட்டாயம்
அதாவது தேர்தல் நடத்த கூடாது என்று உறுதி அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறார். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். இதனால் உட்கட்சி மோதல் முடிவிற்கு வராமல் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நவம்பர் 21
நவம்பர் 21ல்தான் இதில் அடுத்தகட்ட விசாரணை நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வர உள்ள நிலையில் அவரை சந்திக்க ஓ பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தீவிரமாக முயன்று வருவதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்த விவகாரத்தில் டெல்லியின் ஆதரவு கிடைக்க வேண்டும். டெல்லியின் சப்போர்ட் தங்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறது.

பாஜக
பாஜக ஆதரவு இருந்தால், அதிமுக கட்சியில் எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று இவர்கள் இருவருமே நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே தற்போது இரண்டு பேருமே மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மோடி வந்த போதும் இரண்டு பேருமே தனி தனியாக நேரம் கேட்டனர். விமான நிலையத்தில் இறங்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கும் மீண்டும் செல்லும் போது ஓ பன்னீர்செல்வத்திற்கும் நேரம் வழங்கப்பட்டது.

மீண்டும்
இந்த நிலையில்தான் திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். இந்த நிலையில்தான் இரண்டு பேருக்குமே நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக எடப்பாடி தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டதாகவும் இன்னொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பில் இருந்து சிலரிடம் பேசி பார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தூது
முதலில் இரண்டு பேருக்குமே தனியாக சந்திக்க நேரம் தரப்படவில்லை. மோடி பயண திட்டம் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டதால் இந்த நேரம் கொடுக்கப்படவில்லை. அதன்பின் தொடர் முயற்சிக்கு பின்பாக நேரம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விமான நிலையத்தில் ஒருவர் வரவேற்கலாம், ஒருவர் வழியனுப்பலாம் என்ற ரீதியில் இரண்டு பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதிலும் பிரதமர் மோடியிடம் தனியாக பேச நேரம் தரப்படாது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications