பல்கலைக்கழகத்திற்கும், சிகரெட் கம்பெனிக்கும் வித்தியாசம் இல்லையா? ஹைகோர்ட் சரமாரி கேள்வி
மதுரை: சிகரெட் கம்பெனிக்கும் தமிழ் பல்கலைக்கழகத்திற்கும் வித்தியாசம் இல்லையா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு அனுமதி பெறாமல் சான்றிதழ் படிப்பு நடத்தினால், ஏன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கக் கூடாது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "நான் தஞ்சாவூர் வல்லம் பகுதியில் சித்த மருத்துவசாலை நடத்தி வருகிறேன். தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்கிறேன். எனவே சித்த மருத்துவ கிளினிக் நடத்துவதில் தலையிடக்கூடாது என்று தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவானது இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் பல்கலைக் கழகத்தின் சார்பில், 'தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் சித்தா சான்றிதழ்களில் இந்த படிப்பு சான்றிதழை வைத்து சித்தா மருத்துவம் பார்க்க முடியாது என்று சான்றிதழில் சிறிய எழுத்தில் குறிப்பிட்டு இருக்கிறோம்' என்று கூறப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ்கள் படிப்பு வழங்குகிறது. இவ்வாறு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் சித்தா சான்றிதழ் படிப்பை வைத்து சித்த மருத்துவம் பார்க்க இயலாது என குறிப்பிட்டுள்ளோம் என்று கூறுவது, சிகரெட் பெட்டியில் புகைப்பிடித்தல் கூடாது, புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என சிறிய எழுத்துக்களில் எழுதியிருப்பார்களே அதில் குறிப்பிடப்பட்டது போல் இருக்கிறது.
தமிழ் பல்கலைக்கழகத்திற்கும், சிகரெட் கம்பெனிக்கும் வித்தியாசம் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அவ்வாறு அனுமதி பெறாமல் சான்றிதழ் படிப்பு நடத்தினால், ஏன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க கூடாது.
இதுவரை எத்தனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களுடன் தஞ்சாவூர் பல்கலைக்கழக பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தவிட்டார். இதன்பின்னர் இந்த வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
பல்கலைக்கழக வேந்தராக மீண்டும் ஆளுநர்? முதலமைச்சர் வேண்டாமா? அமைச்சர் கூறியது என்ன? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications