வலிக்குதுய்யா, வைகையை விட்றாதீங்க.. பல் விழுந்த முகம் போல மதுரை சாலைகள்: உருகி சொன்ன சாலமன் பாப்பையா
சென்னை: மதுரையின் 100 வார்டுகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட வேண்டும், ஆண்டுதோறும் போட்டிகளை நடத்த வேண்டும்.. மதுரையின் மத்திய சிறைச்சாலை மாற்றப்பட்டால், அந்த இடத்தில் ஒரு மிருகக்காட்சி சாலையை அமைக்கலாம்.. தனது இந்தத் திட்டங்கள் குறித்து விரிவான கட்டுரையை வழங்கவும் தான் தயாராக இருக்கிறேன்" என்று சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற "என் ஊர் என் கனவு 2030" தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பு கருத்தரங்கில், மூத்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் மதுரை நகரின் வளர்ச்சி குறித்து தனது ஆதங்கங்களையும் ஆலோசனைகளையும் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் பேசிய சாலமன் பாப்பையா, "வைகை ஆறு இல்லாவிட்டால் மதுரை என்ற ஊரே உருவாகியிருக்காது.. லண்டன் மாநகரின் தேம்ஸ் நதியைப் போல வைகையை நீர் நிலையாக மாற்ற வேண்டும்..
மதுரை வைகை ஆறு
வைகையின் இருபுறமும் நடக்கும் ஆக்கிரமிப்புகளை தடுத்து, மணல் திருட்டை அறவே ஒழிக்க வேண்டும், நகரின் பழமையான கிருதுமால் நதி இன்று குப்பைகள் கொட்டப்பட்டு கொசு உற்பத்தி மையமாக மாறியிருப்பது மனதிற்குப் பெரிய வலியைத் தருகிறது.. வண்டியூர் தெப்பக்குளத்தை போல மற்ற கண்மாய்களையும் தூர்வார வேண்டும்.. இதை பாராட்டும்போது தயவுசெய்து அரசியல் ஆக்க வேண்டாம், இதெல்லாம் நம்முடைய கடமை...
மதுரையின் ஆன்மாவாக திகழும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சிறு சேதம் ஏற்பட்டால் கூட மதுரையின் கதையே முடிந்துவிடும், மீனாட்சி அம்மன் கோயிலில் தண்ணீர் நின்றால் அந்த கட்டிடம் என்னாகும்?
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு பொறியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மீனாட்சி அம்மன் கோவில், கோரிப்பாளையம் தர்கா மற்றும் செயின்ட் மேரிஸ் சர்ச் ஆகிய மூன்றையும் மையப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும்..
மதுரையின் பேருந்து நிலையங்கள் இன்று பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் 8 ஆண்டுகளாக பணிகள் முடங்கி கிடக்கின்றன.. ஒரு காலத்தில் சிறப்பாக இருந்த பேருந்து நிலையம் இன்று சத்திரம் சாவடி போல மாறியிருக்கிறது...
சாலமன் பாப்பையா உருக்கம்
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை போல மதுரையிலும் பிரம்மாண்டமான பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும், பெரியார் பேருந்து நிலையத்தை தவிர மற்றவற்றை நகருக்கு வெளியே மாற்ற வேண்டும்.. மீனாட்சி கோவிலை சுற்றியுள்ள நெரிசலை குறைக்க மினி பேருந்துகளை இயக்கலாம்.. ஒரே மழையில் சாலைகள் பல் விழுந்த முகம் போல குண்டும் குழியுமாக மாறிவிடுகின்றன..
மதுரையின் 100 வார்டுகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட வேண்டும், ஆண்டுதோறும் போட்டிகளை நடத்த வேண்டும்.. மதுரையின் மத்திய சிறைச்சாலை மாற்றப்பட்டால், அந்த இடத்தில் ஒரு மிருகக்காட்சி சாலையை அமைக்கலாம்.. தனது இந்தத் திட்டங்கள் குறித்து விரிவான கட்டுரையை வழங்கவும் தான் தயாராக இருக்கிறேன்" என்றெல்லாம் விழாவில் சாலமன் பாப்பையா கூறினார்..
அமைச்சர் மூர்த்தி
இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி பேசும்போது, என் மனதில் இருந்ததையெல்லாம் சாலமன் பாப்பையா பேசிவிட்டார்.. மதுரையின் தேவைகளை துல்லியமாக பிரதிபலித்து சொல்லிவிட்டார்..
மதுரை ஒரு மதச்சார்பற்ற ஊர். மீனாட்சி அம்மன் கோவிலின் நெரிசலை குறைக்கவும், வைகை ஆற்றைச் சுத்தப்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்படும். கீழவாசல் மற்றும் யானைக்கல் பகுதி மக்கள் நகரின் வளர்ச்சிக்காக ஒத்துழைப்பு வழங்கும்போது மதுரை மேலும் அழகாகும்..
கோயம்புத்தூர் போன்ற தொழில் வளர்ச்சி உணர்வு தற்போது மதுரைக்கும் வந்துள்ளதால் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐடி (IT) உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெரும் மாற்றங்கள் நிகழும், மதுரை விமான நிலையம் விரைவில் சர்வதேச அந்தஸ்து பெற போகிறது" என்று உறுதிப்படக் கூறினார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications