பணம், ஆவணங்கள் பறிமுதல்? சினிமா பைனான்சியர் மதுரை அன்பு வீட்டில் ஐடி ரெய்டு நிறைவு -சகோதரருக்கு குறி
மதுரை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்று இருக்கும் நிலையில் அவரது சகோதருடைய வீட்டில் மட்டும் ரெய்டு தொடர்ந்து நடைபெறுகிறது.
மதுரை அன்பு என்று அழைக்கப்படும் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தமிழ் மட்டுமின்றி இந்திய அளவிலான சினிமாக்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் அன்புச்செழியனிடமே கடன் பெற்று திரைப்படங்களை தயாரித்து வருகின்றன.
இந்த நிலையில்தான் 3வது நாளாக அன்புவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற. கடந்த 2 ஆம் தேதி அதிகாலை 5:30 மணி முதல் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்கள், சைதாப்பேட்டையில் உள்ள திரையரங்கம், மதுரையில் உள்ள திரையரங்கம் என பல இடங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தயாரிப்பாளர்கள்
இதேபோல், முன்னணி தயாரிப்பாளர்களான சத்யஜோதி தயாரிப்பு நிறுவன தலைவர் தியாகராஜன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தலைவர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவன தலைவர் ஞானவேல் ராஜா, வி கிரியேசன்ஸ் தயாரிப்பு நிறுவன தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா உள்ளிட்டோரின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.

20 தயாரிப்பாளர்கள்
மேலும் மதுரை அன்புவிடம் நிதிபெற்ற திரைப்படங்களை தயாரித்த 20 முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாக இருக்கிறார்கள் என்றும் அதில் நடிகர் தனுஷும் அடக்கம் எனவும் செய்திகள் வெளியாகின. சோதனை நடத்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களே தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களாக திகழ்பவை.

ரெய்டு நிறைவு
இந்த நிலையில் 3 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை தற்போது நிறைவடைந்து உள்ளன. 3 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அன்புச்செழியனின் சகோதரர் வீட்டில் வருமான வரி சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

யார் இந்த மதுரை அன்பு?
சினிமாவுக்கு பைனான்ஸ் செய்வது மட்டுமின்றி கோபுரம் சினிமாஸ் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களையும் தயாரித்து வந்த இவர், சொந்தமாக திரையரங்கத்தையும் நடத்தி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமாரின் தற்கொலைக்கு மதுரை அன்புவே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications