எய்ம்ஸ் எங்கே? பாஜக தலைவர் நட்டா “பொய்” சொல்லிட்டாரு - மதுரை போலீசில் காங்கிரஸ் கட்சியினர் புகார்
மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95% நிறைவடைந்து விட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தவறான கருத்து தெரிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகாரளித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பாஜக தேசிய தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா கடந்த வாரம் வருகை தந்தார்.
அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95% நிறைவடைந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டபின் அதை திறந்து வைப்பார் என்றும் கூறினார்.

நேரில் சென்ற எம்.பிக்கள்
உடனே மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மற்றும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பகுதிக்கு சென்று கட்டுமானப் பணி எதுவும் தொடங்கப்படவில்லை என்று வீடியோ வெளியிட்டனர். ஏற்கனவே இருந்த செங்கல்லை கூட காணவில்லை என சு வெங்கடேசன் குற்றம்சாட்டினார்.

ஒப்பந்த புள்ளி
"உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை. ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை. அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம்." என்றும் அவர் கூறி இருந்தார்.

ஜே.பி.நட்டா மீது புகார்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தகவல் அறியும் உரிமை பிரிவு தலைவர் வழக்கறிஞர் கனகராஜ், தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவு பொதுச்செயலாளர் சக்திவேல் ஆகியோர் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தவறான கருத்து பரப்பியதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மீது புகார் அளித்தனர்.

திமுக அளித்த புகார்
முன்னதாக, மதுரையில் புதிதாக கட்டப்பட்டு இருந்த எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டிடங்களை காணவில்லை என திமுகவினர் ஆண்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தங்கள் மனுவில், "பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சொன்னபடி 95% நிறைவடைந்த எய்ம்ஸ் மருத்துவமனையை நேரில் பார்க்க சென்றபோது காணவில்லை." என தெரிவித்தனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications