Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடியுமா? முடியாதா? அதை மட்டும் சொல்லுங்க! சத்தம் போடக் கூடாது! அரசுத் தரப்பை கண்டித்த நீதிபதி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திண்டுக்கல் பெருமாள் கோவில்பட்டி மண்டு கருப்பண்ணசாமி கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பான உத்தரவை நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியுமா? முடியாதா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

திண்டுக்கலைச் சேர்ந்த சித்திரபால்ராஜ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், திண்டுக்கல், மண்டு ஹ் பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள மண்டு கருப்பண்ணசாமி கோவிலை திறந்து பூஜைகள் செய்யவும், கார்த்திகை தீபத்தை ஏற்றவும் அனுமதி வழங்கக் கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கோவிலை திறந்து பூஜைகள் செய்யவும், கார்த்திகை தீபத்தை ஏற்றவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் பெருமாள் கோவில்பட்டி பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரியும் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

madurai high court Dindigul Temple

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இருவரும் நேரில் ஆஜராகினர். ஆட்சியர் தரப்பில், நேற்று உத்தரவு நகல் கிடைத்தவுடன் காவல்துறையோடு இணைந்து உத்தரவை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி உத்தரவை நடைமுறைப்படுத்த இயலுமா? இல்லையா? என கேள்வி எழுப்பினார். ஆட்சியர் தரப்பில், சூழ்நிலை, பிரச்சனை எழும் வகையில் உள்ளது. சட்ட, ஒழுங்கு பிரச்சனை எழும். ஆகவே அதனை கருத்தில் கொள்ள வேண்டுமென கோரினார். அதையேற்க மறுத்த நீதிபதி, உத்தரவை நிறைவேற்ற இயலுமா? இல்லையா? என்பதற்கு மட்டும் நேரடியாக பதிலளிக்குமாறு கோரினார்.

அரசுத்தரப்பில், அரசுக்கு எந்த சார்பும் இல்லை. மதநல்லிணக்கமும், அமைதியுமே முக்கியம். இந்த வழக்கில் காலை நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு முறையீடு செய்யப்பட்டு, அதிலேயே அதிகாரிகள் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கியம் கருதி மட்டுமே நேரில் ஆஜராக உத்தரவிட ஆகாரம். மேல்முறையீடு செய்யக்கூட அரசுக்கு நேரம் வழங்காமல், நேற்று மாலை 04.52மணிக்கு உத்தரவு, காலை நீதிமன்ற அவமதிப்பு முறையீடு மதியம் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு என நேரமே வழங்கப்படவில்லை. அரசுத்தரப்பில் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கால அவகாசம் வழங்காமல் இவ்வாறு செய்வது ஏற்கத்தக்கதல்ல. மேல்முறையீடு செய்வது அடிப்படை உரிமை என தெரிவிக்கப்பட்டது.

மூத்த அரசு தலைமை வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் விரும்புகின்றனர். ஆனால், சில விரும்பத்தகாத சூழல் எழுகையில், அதனை கருத்தில் கொள்ள வேண்டும். கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல், அதிகாரிகள் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக முன்பெழுந்த பிரச்சனைகளில் ஒரு கொலை நிகழ்ந்துள்ளது. 21 வழக்குகள் பதிவாகியுள்ளன. 144 தடை உத்தரவை திரும்ப பெறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆகவே, பொது அமைதியையும், கள நிலவரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற இயலுமா? இயலாதா? என கேள்வி எழுப்பினார். மாவட்ட ஆட்சியர் தரப்பில், நேற்றைய தினமே உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார். அதற்கு நீதிபதி நான் கேட்பது முடியுமா? முடியாதா? என்பதுதான் என கேள்வி எழுப்பினார். அரசுத்தரப்பில், நீதிபதி அழுத்தம் தருவதாக தெரிவிக்கப்பட்டது

அதற்கு நீதிபதி, நான் அழுத்தம் தரவில்லை. பதிலைத் தான் எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டார். மாவட்ட ஆட்சியர் தரப்பில்,வேறு வழியின்றி பிரச்சினை எழுந்ததால், அதனை கட்டுக்குள் வைக்கும் நோக்கில் பின்னரவில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்தார். அதற்கு நீதிபதி, அவ்வாறெனில் உங்களால் செய்ய இயலாது. அப்படித்தானே? என தெரிவித்தார். அதற்கு அரசுத்தரப்பில் பதிலளிக்க முயன்ற போது, சத்தத்தை கூட்டாதீர்கள் என நீதிபதி கடிந்து கொண்டார்.

அதற்கு மூத்த அரசு வழக்கறிஞர், சட்டத்திற்கு உட்பட்டு, எனது கருத்துக்களை வைக்க இடமுண்டு. எங்களுக்கும் மரியாதை உண்டு என தெரிவித்தார். உடனே மனுதாரர் தரப்பில், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமான உத்தரவுகளை மட்டும் நீங்கள் நடைமுறைப்படுத்தவில்லை. நீதிபதி, நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளானவரை கேள்வி எழுப்பும் போது வார்த்தைகளை உயர்த்துவது ஏற்கத்தக்கதல்ல என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுவிட்டதா? என கேள்வி எழுப்பினார்.

அரசுத்தரப்பில், காலையில் முறையீடு செய்யப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் பிரதான எண் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அரசுத்தரப்பில், 30 ஆண்டுகளாக இது போல கோரிக்கை எழாமல், கடந்த வாரம்& மனு செய்திருக்கிறார்கள். கள நிலவரத்தையும், சட்ட ஒழுங்கையும், மத நல்லிணக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆட்சியர் தரப்பில், 144 தடை உத்தரவை திரும்பப் பெற்றால், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருப்பதாலும், கள நிலவரத்தை கருத்தில் கொண்டும் 144 தடை உத்தரவை திரும்பப் பெற இயலாது என ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளனர் என பதிவு செய்து, வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+