கனிமொழி சொன்ன அந்த தமிழகத்தைச் சேர்ந்த ஆளுநர் யார்? அமித்ஷா போஸ்டிங் தருவாராமே! மதுரையில் பரபரப்பு
மதுரை: தேர்தலுக்கு பிறகு இந்தி கற்றுக் கொண்டு ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக எடப்பாடி பழனிசாமி சென்றுவிடுவார். "எந்த மாநிலம் உங்களுக்கு பிடித்தது என்பதை இப்போதே தேர்வு செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஆளுநர் வாய்ப்பை அமித்ஷா உங்களுக்கு தருவார்" என கனிமொழி விமர்சித்துள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து, மதுரை மகபூபாளையம் ஜின்னா திடல் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

தேர்தல் பரப்புரையில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி., 'தி.மு.க. ஆட்சி இந்து மக்களுக்கு எதிரான ஆட்சி' என்று கூறுகிறார்கள். ஆனால் திமுக அனைவருக்குமான ஆட்சியாக இருந்தது என்பதற்கான சாட்சி, எனது அருகில் இருக்கக்கூடிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கை மற்றும் நெற்றியைப் பார்த்தால் போதும்.
நமது அரசு சிறுபான்மையின் மக்களுக்கு துணை நிற்கும் அரசு என்றாலும் பெரும்பான்மையான இருக்கக்கூடிய மக்களுக்கும் துணை நின்று வருகிறது. நமது அரசின் ஒவ்வொரு திட்டங்களும் அடிப்படை இன்றி அனைவருக்கும் சென்று சேருகிறது.
தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு கலாச்சாரத்துக்கும், மொழிக்கும், பண்பாட்டிற்கும் துரோகம் செய்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டிற்கும் மக்களுக்கும் எதிரான சட்டங்கள் வரும் போதும், அதற்கு எதிராக குரல் கூட கொடுக்காதவர் எடப்பாடி பழனிசாமி. ஒன்றிய அரசு சொல்லும் திட்டத்திற்கு கை தட்டும் அவரை 'சங்கி' என்று கூறாமல் வேறு என்ன கூறுவது.

தேர்தலுக்கு பிறகு இந்தி கற்றுக் கொண்டு ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக எடப்பாடி பழனிசாமி சென்றுவிடுவார். "எந்த மாநிலம் உங்களுக்கு பிடித்தது என்பதை இப்போதே தேர்வு செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஆளுநர் வாய்ப்பை அமித்ஷா உங்களுக்கு தருவார்".
பீகாரில் பல முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமாரை தற்பொழுது ராஜ்யசபாவில் அமர வைத்துள்ளனர். எனது தேர்தல் பரப்புரையை கீழடியில் இருந்து துவங்கினேன், இந்த தேர்தல் என்பது கீழடிக்கும் நாக்பூருக்கும் இடையேயான போர் என்பதை மறந்துவிடக்கூடாது.
பீகாரில் பல முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமாரை தற்போது ராஜ்யசபாவில் அமர வைத்துள்ளனர். எனது தேர்தல் பிரசாரத்தை கீழடியில் இருந்து துவங்கினேன்; இந்த தேர்தல் கீழடிக்கும் நாக்பூருக்கும் இடையேயான போர் என்பதை மறக்கக்கூடாது.
தமிழ்நாடு இத்தகைய வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான், அவர்களைத் தாண்டி தமிழ்நாடு அரசியல் என்பது கிடையாது.

ஜெய்ஹிந்த்புரம் ரயில்வே கேட், தொழில் பயிற்சி மையம் மற்றும் மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மாநகராட்சியின் 148 சாலைகள் புதுப்பிக்கும் பணி நடைபெற்றுள்ளது. மதுரையை மாநகராட்சியாக உயர்த்தியவர் கலைஞர்.
மதுரையில் செம்மொழிப் பூங்கா, பல்லடக்கு வாகன நிறுத்தும் இடம், நவீன வசதி கொண்ட சமூக நலக்கூடம், முதல்வர் படைப்பகம் மற்றும் வெள்ளக்கல் பகுதியில் உள்ள குப்பை கிடங்கு பயோ-மைனிங் முறையில் சுத்தம் செய்து சீரமைக்கப்படும்.
மகளிர்க்கு வழங்கப்படும் 8,000 ரூபாய் கூப்பன், வீட்டு உபயோகப் பொருட்கள் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது. ஒருவர் வீட்டில் பிரிட்ஜ் இருந்தால் மீண்டும் பிரிட்ஜ் வழங்கினால் அவர் என்ன செய்வார்? நாங்கள் வழங்கும் 8,000 ரூபாய் கூப்பன் மூலம், வீட்டில் கிரைண்டர் இருந்தாலும், மாவு அரைத்து விற்பனை செய்ய கூடுதலாக பெரிய கிரைண்டர் வாங்கி சுய தொழில் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
பரப்புரை மேற்கொண்டபோது, அருகிலுள்ள பள்ளிவாசலில் தொழுகை ஒலி ஒலித்ததால், தனது தேர்தல் பிரச்சார உரையை கனிமொழி கருணாநிதி எம்.பி சற்று நேரம் நிறுத்தினார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications