ஒன்னு ஆமானு சொல்லுங்க.. இல்லைனா இல்லைனு சொல்லுங்க! தீப விவகாரத்தில் பேசாத விஜய்! விளாசிய கஸ்தூரி
மதுரை: தவெக தலைவர் விஜய் அவர்கள் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒன்று ஆமாம் என்று சொல்லுங்கள் அல்லது இல்லை என்று சொல்லுங்கள் உங்களுக்கு பேச விருப்பம் இல்லையா? பேச தெரியவில்லையா? இரண்டுமே மோசமானது என கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகையும் பாஜக பிரமுகருமான கஸ்தூரி.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று திரைப்பட நடிகையும், பாஜக பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் உள்ள மக்களை சந்தித்தார்.
தொடர்ந்து தீபம் ஏற்ற வலியுறுத்தி கைதான பெண்களுக்கு சால்வை அணிவித்து அவர்களிடம் சிறிது நேரம் உரையாடினார். அப்பகுதி பெண்கள் அவருக்கு சால்வை அணிவித்து பாசி மணி அணிவித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

திருப்பரங்குன்றம் பிரச்சனை
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர்," திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. இந்த திமுக ஆட்சியில் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட முதல் பெண் அடியேன் தான். இவர்களெல்லாம் அதை வெற்றியோடு எதிர் கொண்டு என்னுடன் நிற்பது பெருமையாக உள்ளது. எல்லா மக்களும் ஒரே குரலாக சொல்லுவது மத்தவங்களுக்கு தடை செய்யவில்லை. எங்க சாமி கும்பிடுவதற்கு உங்களுக்கு என்ன நோகுது. தீபம் ஏற்ற வேண்டும் என ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். அதைக் கூட கொச்சமாக பிரச்சாரம் செய்கிறார்கள்.
கார்த்திகை தீபம் விவகாரம்
கனிமொழி அக்காவுக்கு சர்வே தூண் என்று தோன்றுகிறது அவங்க தொல்லியல் துறை அதிகாரியா? சர்வே கல்லில் இதற்கு அனுமார் பொறித்து இருக்கிறார்கள்? தூணை கொச்சைப்படுத்தினீர்கள். ஒரு உயிர் போய் உள்ளது. அதையும் கொச்சைப்படுத்துறீர்கள். இதை ஜீரணிக்க முடியவில்லை. மலை மேல் மக்கள் போனால் கலவரம் நடந்துவிடும். இன்றைக்கு மட்டும் எதற்காக திறந்து விட்டீர்கள். கடவுள் என்றால் எல்லாமே ஒன்னு தான் வழிபடுவது தான். வேறு வேறு உங்க தர்காவுக்கு வருகை தந்து வழிபட நான் தயார். எங்களுடன் வந்து நீங்கள் விளக்கு ஏற்றுங்கள். பத்து ரூபா திரி, இருபது ரூபாய், எண்ணெய் கார்த்திகை அன்றைக்கு ஏத்திருந்தா இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்காது.
திருமாவளவன்
திருமாவளவன் சேராத இடம் சேர்ந்து மனசாட்சிக்கு விரோதமாக பேசுகிறார். முருகன் என்ற பெயர் வைத்திருந்தால் கொண்டு வந்த காட்டுங்கள் என்று சொல்றாரே. என்னுடைய மகனுடைய பெயர் கார்த்திகேயன் தான். கர்நாடகாவில் நிறைய பேருக்கு முருகனா, முருகையா என்று பெயர் உள்ளது. எல்லோரும் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள். எத்தனை பேரை நான் உங்களுக்கு வந்து காட்டணும். அவருக்கு நம்பிக்கை இல்லை. வெறுப்பு மட்டும் தான் உள்ளது நம்ம பதில் சொல்ல முடியாது. ஆபாச சிற்பங்கள் இருக்கும் இடம் இந்து கோவில் என்று சொல்லிய பெரிய மனுஷன் தான் அவர். வேங்கை வயல் இன்று வரை நாறிக்கொண்டிருக்கிறது. இன்னும் அவர் போகவில்லை.
பவன் கல்யாண்
ஆந்திராவில் உள்ள துணை முதலமைச்சர் பவன் கல்யாண் திருப்பரங்குன்றத்தில் நடக்கும் அநீதியை பார்த்து அடுத்தடுத்து அறிக்கை கொடுக்கிறார். முருகனை வழிபடாதவர்கள் கூட இன்றைக்கு அவரைப் பற்றி படித்து தெரிந்து கொள்கிறார்கள். இங்க பனையூரில் இருக்கிற நண்பர் விஜய் அவர்கள் அவருக்கு பணையூர் தாண்டி தாண்டி வெளியே வந்தார் என்றால் ஈரோட்டுக்கு போயிருக்கிறார். திருப்பரங்குன்றம் அவருக்கு தெரியாது என்று சொல்ல முடியாது. கிறிஸ்துமஸ் விழாவில் நேற்று பங்கேற்று உள்ளார். அப்படிப்பட்டவர் கார்த்திகை தீபத்திற்கு ஒரு வாழ்த்து சொல்லி இருக்கலாம்.
விஜய்
இன்னைக்கு அவர பாக்குற சேர்கிற கூட்டம் எல்லாமே முருகன் நம்பிக்கை இருக்க கூட்டம். எல்லா மதத்தையும் மதிக்கிறார் என்று சொன்னால் தான் அவர் காமராஜர், வேலுநாச்சியார் போன்றவருடைய படங்களை வைத்து அரசியல் செய்ய தகுதியானவர். ரொம்ப முக்கியமா அவர்கள் பெயரை இப்பொழுது சொல்வதில்லை. எம்ஜிஆர் புரட்சித்தலைவி அவர்கள் பெயரை சொல்லி அரசியல் செய்ய வேண்டும் என்றால் கடவுளை நம்புவோர் நீங்கள் மதிக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் ஒரு கண்ணுல வெண்ணெய் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பு இப்படி ஒரு அநீதி நடக்கிறது.
தளபதி விஜய்
இந்து மதத்தை தூக்கிப் பிடிக்க வேண்டாம். இதுபோல் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மனிதாபிமான ஒரு அறிக்கை கொடுத்திருக்கலாம். இதைப் பற்றி எந்த கருத்தும் அவருக்கு இல்லையா? தமிழகத்துக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கனவில் இருக்கக்கூடியவர் திருப்பரங்குன்றம் பிரச்சனையை பேசாதது தவறாக இருக்கும். இல்லை அவருக்கு எழுதி கொடுக்கிறவர்கள் இன்னைக்கு லீவா? இப்பவும் நான் சொல்கிறேன் நண்பர் தளபதி விஜய் அவர்கள் திருப்பரங்குன்றம் விஷயத்தில் ஒன்னு ஆமானு சொல்லுங்க இல்ல இல்லன்னு சொல்லுங்க. பேசாத மடந்தையாக இருப்பதால் உங்களுக்கு பேச விருப்பம் இல்லையா? பேச தெரியலையா? இரண்டுமே மோசமானது." என்றார்.
-
விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ் -
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம் -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்! -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications