மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிதையாமல் அப்படியே இருந்தது.. கீழடியில் தோண்ட தோண்ட பொக்கிஷங்கள்.. தமிழன் விட்டுச்சென்ற நாகரீகம்!

Google Oneindia Tamil News

மதுரை: கீழடியில் செய்யப்பட்டு வரும் அகழாய்வில் அடுத்தடுத்த ஆச்சர்யங்கள் ஏற்பட்டுள்ளது. அங்கு தோண்ட தோண்ட மனித எலும்பு கூடுகள் கிடைத்து வருகிறது.

Recommended Video

    Keeladi Agalvaraichi : முழு மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு | Oneindia Tamil

    உலகின் மூத்த முன்னோடி நாகரீகம் தமிழ்தான் என்பதற்கு சான்றாக கீழடி வளர்ந்து நிற்கிறது. அங்கு தோண்ட தோண்ட புதிய கண்டுபிடிப்புகள், வரலாற்று சான்றுகள் இதை உறுதிப்படுத்துகிறது.

    மிக சிறப்பான நாகரீகம் அமைத்து அங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல முன்னேறி நாடுகளின் நாகரீகத்தையே விட தமிழர்களின் நாகரீகம் பல மடங்கு முன்னேறி இருந்தது கீழடி ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நேற்று மாதிரி இல்லை.. இன்று தமிழகத்தில் மீண்டும் வெளுக்கும் மழை.. எங்கெல்லாம் பெய்யும் தெரியுமா? நேற்று மாதிரி இல்லை.. இன்று தமிழகத்தில் மீண்டும் வெளுக்கும் மழை.. எங்கெல்லாம் பெய்யும் தெரியுமா?

    மனித உடல் எப்படி

    மனித உடல் எப்படி

    இங்கு செய்யப்பட்டு வரும் ஆய்வில் தற்போது வரிசையாக மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து கீழடியில் பகுதியில் புதைக்கப்பட்டு இருக்கும் மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கொந்தகை பகுதியில் செய்யப்பட சோதனையில் இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதோடு கீழடி ஆய்வில் மொத்தம் 5 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இரண்டு உடல்கள்

    இரண்டு உடல்கள்

    இங்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்து. அதனபின் அங்கிருந்து மேலும் இரண்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு குழந்தைகளும் மிகவும் இளம் வயது குழந்தைகள் ஆகும். இவர்களின் பாலினம் தெரியவில்லை. இந்த எலும்பு கூடுகள் மீதான கார்பன் சோதனை தற்போது செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று என்ன

    நேற்று என்ன

    இந்த நிலையில் நேற்று அகழாய்வில் அதிரடி திருப்பமாக கொந்தகையில் முழு மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது சிதிலம் அடையாமல் அப்படியே இருந்தது. முழு மனித உடல் எலும்புக்கூடு அப்படியே கிடைப்பது இதுதான் முதல்முறை. ஒன்று 51/2அடி அளவில் இந்த எலும்புக்கூடு இருந்தது. இதற்கு கார்பன் ஆராய்ச்சி செய்ய உள்ளனர். கார்பன் சோதனை மூலம் இதன் வயது மற்றும் காலத்தை கணக்கிட முடியும்.

    எங்கு உள்ளது

    எங்கு உள்ளது

    மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள், தாழிகள் பல கண்டுபிடிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க தமிழர் நாகரீகம் ஆகும். கீழடியில் தற்போது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.

    English summary
    Keezhadi Civilization: 6th phase research finds a few more old Thaazhi and structures in Konthagai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X