தென் தமிழக அரசியலில் நிரந்தரம் (ம)துரை! மு.க.அழகிரி மகனை வாழ்த்தி ஆதரவாளர்கள் போஸ்டர் அலப்பறை!
மதுரை: தென் தமிழக அரசியலில் நிரந்தரம் (ம)துரை என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் அடித்து ஒட்டி மு.க.அழகிரி மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.
தனது அப்பாவுக்கும் சித்தப்பா ஸ்டாலினுக்கும் இடையே மனக்கசப்பு இருப்பினும் கூட, உதயநிதி உள்ளிட்ட குடும்ப உறவினர்களோடு தொடர்ந்து நல்லுறவை பேணி வருகிறார் துரை தயாநிதி.

மதுரையின் பிரதான பகுதியான கோரிப்பாளையத்தை சுற்றிலும் துரை தயாநிதியை வாழ்த்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்க்கின்றன. செப்டம்பர் 27ஆம் தேதி முக அழகிரி மகன் துரை தயாநிதிக்கு பிறந்தநாள். இன்னும் அதற்கு 20 நாட்கள் உள்ள நிலையில் இப்போதே அலப்பறையை ஆரம்பித்துவிட்டனர் அவரது ஆதரவாளர்கள்.
துரை தயாநிதி தற்போது சென்னையில் செட்டிலாகிவிட்டாலும் கூட அவரை இன்னும் மதுரை அரசியலில் இருந்து அவரது தந்தையின் ஆதரவாளர்கள் விடுவதாக இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் துரை தயாநிதியை மதுரை மக்களவை தொகுதியில் களமிறக்க வேண்டும் என்ற ஆசையையும் அழகிரி ஆதரவாளர்கள் வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்த போஸ்டருக்கும் துரை தயாநிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது அவரை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். முக அழகிரி மீதுள்ள விசுவாசத்தின் காரணமாக இது போன்ற போஸ்டர்கள் அடித்து ஒட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. மதுரையை பொறுத்தவரை ஜிகர்தண்டாவுக்கு மட்டுமல்ல போஸ்டர்களுக்கும் பெயர் பெற்ற ஊராக மாறிவிட்டது.
மதுரையில் அரசியல் கட்சியினரோ, நடிகர்களின் ரசிகர்களோ, யார் போஸ்டர் அடித்தாலும் பிரம்மாண்ட சைஸ்களில் போஸ்டர்கள் அடித்து அதில் இடம்பெறும் வாசகங்கள் கவனம் ஈர்க்கும் வகையில் பார்த்துக் கொள்கின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications