Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சொக்காயி" வாசலில் போட்ட கோலம்.. டக்குனு திரும்பின செல்லூர் ராஜூ.. மதுரை திமுகவே குஷியில் துள்ளுதே

Subscribe to Oneindia Tamil

மதுரை: 1000 ரூபாய் உரிமைத்தொகையை பெற்ற பெண்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.. அந்தவகையில், இன்ப அதிர்ச்சி தரும் வகையில், ஒரு நன்றி திமுக பக்கம் வந்துள்ளது.

கலைஞர் உரிமைத்தொகையை வரவேற்றும், முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் வீட்டின் முன் கோலம் போட்ட அதிமுக கவுன்சிலரால் மதுரை மாநகராட்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Madrai Incident and aiadmk councilor thanks Chief Minister MK Stalin in Rangoli for Magalir Urimai thogai scheme

தமிழகம் முழுவதும் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மதுரையில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் இரு வேறு இடங்களில் தொடங்கி வைத்தனர்.

நன்றி முதல்வரே: இந்த திட்டத்தில் நேற்று ரூ.1000 வங்கியில் பெற்ற பெண்கள், அந்த திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து காலையில் தங்கள் வீடுகள் முன் கோலமிட்டு வரவேற்றனர்.

மாநகராட்சி 26வது வார்டிலும் பெண்கள், தங்கள் வீடுகள் முன் இதுபோல் கோலமிட்டு தமிழக அரசின் இந்த திட்டத்தை வரவேற்றனர்.
சமீபத்தில், காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகமெங்கும் விரிவுபடுத்தியிருந்தார்.. முதல்வர் திருவாரூரில் இந்த திட்டத்தை துவக்கி வைக்க, திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதிகளில் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்து, பள்ளி மாணவர்களுடன் உட்கார்ந்து சிற்றுண்டி சாப்பிட்டார்கள்.

Madrai Incident and aiadmk councilor thanks Chief Minister MK Stalin in Rangoli for Magalir Urimai thogai scheme

அய்யப்பன் ஷாக்: இந்த நிகழ்வுகளில் அதிமுக தரப்பில் யாருமே கலந்துகொள்ள கூடாது என்று ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தாராம்.. ஆதனால், அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் கலந்து கொள்ளாதபோது, அதிமுக எம்எல்ஏ அய்யப்பன் மட்டும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை உசிலம்பட்டியில் தொடங்கி வைத்தார் அய்யப்பன். ஓபிஎஸ் ஆதரவாளராக இவர் கருதப்பட்டாலும், அய்யப்பனின் இந்த செயல், ஒட்டுமொத்த அதிமுகவுக்கும் அதிர்ச்சியை அப்போது தந்திருந்தது. இந்நிலையில், இன்றைய தினம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். 1000 ரூபாய் பெற்றுக் கொண்ட பெண்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகிறார்கள்.

நன்றி சொக்காயி: இந்நிலையில், அதிமுக பிரமுகர் ஒருவரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.. இவர் ஒரு கவுன்சிலர் ஆவார்.. மதுரை மாநகராட்சி 26வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சொக்காயி.. நரிமேடு பகுதியை சேர்ந்த இவர், இன்று காலை தன்னுடைய வீட்டிற்கு முன்பு, "உரிமைத்தொகை வழங்கிய தளபதிக்கு நன்றி, கே.சொக்காயி, கவுன்சிலர், 26வது வார்டு" என்று கோலம் போட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரவேற்றுள்ளார்.

திமுக அரசின் திட்டத்திற்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து அதிமுக கவுன்சிலரே, இப்படி பகிரங்கமாக கோலம் போட்டு நன்றி தெரிவித்துள்ளது, மாநகர அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..

Madrai Incident and aiadmk councilor thanks Chief Minister MK Stalin in Rangoli for Magalir Urimai thogai scheme

சொக்காயி விளக்கம்: இதுபற்றி சொக்காயி சொல்லும்போது, "நான் அதிமுகவில்தான் இருக்கிறேன்.. என்னுடைய வார்டு பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் இந்த திட்டத்தை வரவேற்றேன். அதற்கும், அரசியலுக்கும் என்ன இருக்கிறது" என்று கேள்வி எழுப்புகிறார்..

ஆனால், மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநகர செயலாளருமான செல்லூர் ராஜூ இதற்கு கருத்து கூறியுள்ளார். "சொக்காயி, திமுக, அதிமுக இரண்டு பக்கமும் இருந்து வருகிறார். அந்த வார்டு வட்ட செயலாளர் சொன்னார் என்பதற்காக, நான்தான் அவருக்கு சீட் கொடுத்தேன். 4 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பயம்தான் காரணம்: உடனே அவரை எதிர்த்து திமுகவினர் கேஸ் போட்டார்கள்.. மதுரை மாநகர அதிமுக சார்பில் அந்த வழக்கை சந்தித்து, அவரை அந்த வழக்கில் வெற்றிப்பெற வைத்தோம். இப்போது, அதை எதிர்த்து திமுகவினர் சுப்ரீம்கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அந்த வழக்கிற்கு பயந்து அவர், இப்படியெல்லாம் சொக்காயி நடந்து கொண்டிருக்கலாம்" என்றார் செல்லூர் ராஜூ.

எனினும், மாற்றுக்கட்சியினரும் பலன்பெறும்வகையில், திமுகவின் திட்டம் ஏழை மக்களை சென்றடைந்துள்ளது, பலரையும் ஈர்த்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+