ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுப்பது குற்றமில்லை.. உள்நோக்கம் இருக்கக் கூடாது! நீதிமன்றம் அதிரடி!
மதுரை: ஒரு பெண்ணின் கையை ஒரு ஆண் பிடித்து இழுப்பது என்பது அப்பெண்ணின் கண்ணியத்தை பாதிக்கும் செயலாகும் எனவும், அதே நேரத்தில், உள்நோக்கம் இல்லாமல் பெண்ணின் கையை பிடித்து இழுப்பது குற்றமாகாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த 2015ல் நெடுங்குளம் பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த திருமணமாகாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக பெண்ணின் தாயார் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகேசனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை பிசிஆர் நீதிமன்றம் முருகேசனுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.ஆயிரம் அபராதம் விதித்து 2018ல் தீர்ப்பளித்தது.

இதை ரத்து செய்யக்கோரி முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்து ஆர்.என்.மஞ்சுளா பிறப்பித்த உத்தரவில்," ஒரு பெண்ணின் கைகளை ஒரு ஆண் பிடித்து இழுப்பது என்பது அப்பெண்ணின் கண்ணியத்தை பாதிக்கும் செயலாகும். இருப்பினும் உள்நோக்கம் இல்லாமல் கையை பிடித்து இழுப்பது அந்த பெண்ணை அவமதிப்பதாகாது. அது குற்றமும் இல்லை.
இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆணின் உள்நோக்கம் நிரூபிக்கப்படாவிட்டால் அது அவருக்கு சாதகமாகவே அமையும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், மனுதாரர் கையை பிடித்து இழுத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் பாதிக்கப்பட்டவரை ஒரு சாட்சியாக விசாரிக்கவில்லை.
நேரில் பார்த்த சாட்சிகள் கூறியதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. அதன் அடிப்படையில் உறுதியான சான்றுகள் இல்லாமல் தண்டனை வழங்குவது சரியானதல்ல. இதனால் பெண்ணின் கையை பிடித்து இழுத்ததில் மனுதாரர் உள்நோக்கத்துடன் இருந்தார் என்பது நிரூபிக்கப்படாததால், சந்தேகத்தின் பலனை மனுதாரருக்கு வழங்கி அவருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மேல்முறையீடு மனு ஏற்கப்படுகிறது" இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
-
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
திருப்பரங்குன்றம் தீபம்.. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலுக்கு தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம் -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications