அகல்விளக்கு பதிப்பகத்தை யார் பரிந்துரை செய்தது? ஒருத்தரைக் கூட கண்டுபுடிக்கலையா? விளாசிய ஹைகோர்ட்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கோவை, திருச்சி, சேலம், கடலூர், நெல்லை ஆகிய மண்டல நூலகங்களுக்கு, புத்தகக் கொள்முதல் செய்ததில், நீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தாத பள்ளிக்கல்வித்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில், அகல் விளக்கு பதிப்பத்திடம் புத்தகத்தை கொள்முதல் செய்ய யார் பரிந்துரை செய்தது? புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்புடைய ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லையா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, அரசு தரப்பில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2024ல் பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் வெளிப்படையான கொள்முதல் நடைமுறைகளை பின்பற்றக் கோரி பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தேன்.

High Court Library Education Department

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. ஆனால் இந்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. கோவை பெரியார் அறிவுலக நூலகம் உட்பட கோவை, திருச்சி, சேலம், கடலூர், நெல்லை ஆகிய மண்டல நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

எனவே உத்தரவை முறையாக பின்பற்றாத பள்ளிக்கல்வித்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அரசுத்தரப்பில், "நவம்பர் 6ல் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க, பள்ளிக்கல்வித்துறை கடிதம் அனுப்பியது. 9ஆம் தேதி அகல் விளக்கு பதிப்பகத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. 10ஆம் தேதி பெருமாள் முருகன், சதீஷ்குமார், பிரேம் குமார் உள்ளிட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 3 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 4 நாட்கள் கால அவகாசம் வழங்கினால் முழு விபரங்களை சமர்ப்பித்துவிடுவோம்" என தெரிவிக்கப்பட்டது.

காணொலி வாயிலாக ஆஜரான பொது நூலகத்துறை இயக்குநரிடம் நீதிபதிகள் : அகல் விளக்கு பதிப்பகத்திடம் புத்தகத்தை கொள்முதல் செய்ய யார் பரிந்துரை செய்தது? என கேள்வி எழுப்பினர்.

நூலகத்துறை இயக்குனர் தரப்பில், "112 உறுப்பினர்களைக் கொண்ட குழுவே பரிந்துரை செய்வார்" என தெரிவிக்கப்பட்டது.

அரசுத்தரப்பில், " வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமைக்குள்ளாக இந்த விபரங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்" என கோரப்பட்டது.

அதை ஏற்க நீதிபதிகள் மறுத்த நிலையில், நூலகத்துறை இயக்குநர் சார்பில், " அகல்விளக்கு பதிப்பகத்திடமிருந்து, 1700 புத்தகங்களை வாங்க முடிவு செய்யப்பட்டு, 17 லட்ச ரூபாய் செலுத்தப்பட்டது. இது கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு மட்டும்" என தெரிவிக்கப்பட்டது.

அரசுத்தரப்பில், "4 நிலை குழுக்கள் உள்ள நிலையில், வரிசை அடிப்படையில் ஆலோசித்தே புத்தகங்களை கொள்முதல் செய்வது குறித்து முடிவு செய்வர்" என தெரிவிக்கப்பட்டது

அதற்கு நீதிபதிகள், "இந்த 4 குழுக்களையும் தாண்டிதான் அகல் விளக்கு பதிப்பாக நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளனவா? என கேள்வி எழுப்பினர்.

கிழக்கு பதிப்பகத்தின், பத்ரி சேஷாத்ரி காணொலி வாயிலாக ஆஜரான நிலையில், "ஒரு பதிப்பகத்திடமிருந்து 17 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது அதிகம். தென்காசி மாவட்டத்தில் மட்டும் 27 லட்ச ரூபாய்க்கு அகல் விளக்கு பதிப்பகத்திடமிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இதில் தவறு இருப்பதாக தோன்றுகிறது. இந்த தவறை பரிந்துரைக் குழுவினர் மீது வைப்பது ஏற்கத்தக்கதல்ல. ஒவ்வொருவரும் நிபுணத்துவம் பெற்றவர்கள். இது மிகவும் துரதிஷ்டவசமானது. இந்த ஆண்டு பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் போலியான நூல்கள் வைக்கப்பட்டுள்ளன." என தெரிவித்தார்.

நீதிபதிகள், பொது நூலகத்துறை இயக்குனரிடம், "இதுவரை தவறு செய்த ஒரு நபரை கூட கண்டுபிடிக்க முடியவில்லையா? என கேள்வி எழுப்பினர்.

இயக்குனர் தரப்பில், "லஞ்ச ஒழிப்பு துறை இந்த வழக்கை விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், " பிரதமரின் "மனதின் குரல் நிகழ்வு தொடர்பான புத்தகத்தை குழு பரிந்துரைத்தது. ஆனால் அந்த புத்தகம் கொள்முதல் செய்யப்படவில்லை" என தெரிவித்தனர்.

கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சார்பில், "4 நிலை குழுக்கள் உள்ள நிலையில் எங்கு அகல் விளக்கு சேர்க்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த விவாகரத்தில் தேவையெனில் என்னால் ஆன உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன்" என தெரிவித்தார்.

இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், " அரசு தரப்பில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+