திருடனை கண்டுபிடிக்க முடியலையா? அப்போ நீங்க கொடுங்க! அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!
மதுரை: நகை திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், திருட்டு வழக்கில் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை விசாரணை நடத்தி கண்டுபிடிப்பதற்காக திறமை மிக்க காவல்துறை அதிகாரிகளை கொண்ட ஒரு சிறப்பு காவல் பிரிவை மாவட்டம் தோறும் அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மதுரை எஸ்.எஸ் .காலனி புறவழிச்சாலை பகுதியில் வசிக்கும் சுஜா சங்கரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில்," கடந்த நவம்பர்.2015ம் அன்று என் வீட்டை உடைத்து சுமார் 75 பவுன் நகை மற்றும் Rs.1.39,000/- பணமும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில வழக்கு பதிவு செய்யப்பட்டு சுமார் ஒன்பது வருடங்கள் ஆகியும் குற்றவாளிகளையோ எனது திருட்டுப் போன ஆபரணங்களின் நிலை என்னவென்று எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.
இது குறித்து நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட பொழுது, இந்த நகை திருட்டு குற்ற வழக்கு, கண்டறிய முடியவில்லை என எனது வழக்கை முடித்து விட்டனர். னக்கு எந்த ஒரு நோட்டீசும் கொடுக்காமல், நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து விட்டனர். எனவே இந்த வழக்கு விசாரணையை வேறு சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றி திருடு போன நகையை கண்டுபிடித்து தர உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் ஹாரூன் ரஷீத் ஆஜராகி சம்பவம் நடைபெற்று பத்து ஆண்டுகள் ஆகிறது குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டோருக்கான எந்த நிவாரணமும் வழங்கவில்லை எனவே வழக்கை புலனாய்வு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி புகழேந்தி தனது தீர்ப்பில்," தங்க நகை மற்றும் பொருட்கள் திருட்டு குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் பல ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாமல் இருந்து,
கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் பதிவு பதிவு செய்து அந்த வழக்கை கிடப்பில் வைத்துள்ளனர்.
இது போன்று பல நகை திருட்டு வழக்குகளில் கண்டுபிடித்து தரக்கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பல மனுக்கள் தாக்கல் ஆகி வருகின்றன. எனவே ,நகை திருட்டு புகார் குறித்து. காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பல ஆண்டுகளாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. மீட்க முடியவில்லை என அந்த வழக்கில் போலீசார் பதிவு செய்து விடுகின்றனர். இதுபோன்று நகை திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் பதிவு செய்த நாளில் இருந்து ஒரு குறிப்பிட்ட, கால இடைவெளிக்குள், நகை திருட்டு புகார் தாரருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
திருடு போன நகையின் மொத்த மதிப்பில் 30 சதவீதம் தொகையை புகார் தாரருக்கு தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், இது போன்று பல்வேறு நகை திருட்டு வழக்குகள் கண்டுபிடிக்க முடியாமல் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ளது. அந்த வழக்குகளின், நிலவரம் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது, ADSP தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். நகை திருட்டு வழக்கில் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை ,விசாரணை நடத்தி கண்டுபிடிப்பதற்காக திறமை மிக்க காவல்துறை அதிகாரிகளை கொண்ட ஒரு சிறப்பு காவல் பிரிவை மாவட்டம் தோறும் உருவாக்க வேண்டும்.
விசாரணையின் உத்திகள், மற்றும புகார்தாரருக்கும் அரசுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் குறித்து நவீன முறையில் ஆன்லைன் மூலம் கையாள்வது எப்படி?என்பது குறித்து விசாரணை அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளி யில் தொழில் நுட்ப புத்துணர்வு பயிற்சி வழங்க வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications