கணக்கு வழக்கை எடுத்துட்டு நேர்ல வாங்க! டாஸ்மாக் எம்டிக்கு ஆர்டர் போட்ட உயர்நீதிமன்றம்! பரபர பின்னணி
மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளின் அக்.16 முதல் நவ. 6 (இன்று) வரையான வருமானம் மற்றும் வங்கி விபரங்களுடன் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட மேலாளர் ஆகியோர் நாளை (நவ.7) நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த முத்து, கல்யாணி, சிவசாமி, காளிமுத்து உள்ளிட்ட 30 பேர் தங்களுக்கு சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகை கேட்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவில், திண்டுக்கல்லில் நாங்கள் கடை நடத்தி வந்த இடங்களை அரசு 2017ல் கையகப்படுத்தியது. இதற்கு வழங்கிய இழப்பீட்டில் குறைக்கப்பட்ட தொகையை கேட்டு 2019ல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ரூ.4,37,42,783 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்தது அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் இழப்பீட்டு தொகையை 8 வாரத்தில் வழங்க உத்தரவிடப்பட்டது. இழப்பீடு வழங்கியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இருப்பினும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து, இந்த வழக்கு 4 முறை விசாரணைக்கு வந்தும் அரசு தரப்பில் நிறைவேற்றப்படவில்லை. உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கோ செல்லவில்லை. எனவே நிலம் கையகப்படுத்தியது தொடர்பான நிலுவை வழக்குகளுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளின் தினசரி விற்பனை தொகையை வைப்புத் தொகையை செலுத்த உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நிறைவேற்றாததால் முத்து உள்ளிட்ட 30 பேரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முத்துகணேசபாண்டியன் வாதிட்டார்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடுகையில், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவுள்ளது என்றார்.
பின்னர் நீதிபதிகள், திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளின் அக்.16 முதல் நவ. 6 (இன்று) வரையான வருமானம் மற்றும் வங்கி விபரங்களுடன் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட மேலாளர் ஆகியோர் நாளை (நவ. 7) நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications