கோயிலில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் இருந்தால் வன்கொடுமை சட்டம்.. ஹைகோர்ட் அதிரடி
மதுரை: கோயில்களில் ஆடல் - பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடன இடம்பெற்றால் விழா ஏற்பட்டாளர்கள் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அரசகுளத்தைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் " விருதுநகர் மாவட்டம் அரசகுளத்தில் கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. கோயில் விழாவில் தனிநபர் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது. அனைவருக்கும் பொதுவான கோயிலாக கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. ஆனால் தற்போது சிலர் கோயில் எங்களுக்கு சொந்தமானது, தங்களுக்கு மட்டும் தான் முதல் மரியாதை என பிரச்சினை செய்து வருகிறார்கள்.

கடந்த மாதம் நடைபெற்ற பங்குனி உற்சவ விழாவில் ஆடல் - பாடல் நிகழ்ச்சி நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார்கள். நீதிமன்றம் ஆபாச நடனம் இருக்கக் கூடாது என்பது போல் பல்வேறு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் ஏப்ரல் 1-ல் நடைபெற்ற ஆடல் - பாடலில் ஆபாச நடனங்கள் இடம் பெற்றிருந்தது. இரட்டை அர்த்த பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம் விதித்த அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டன. எனவே விழா ஏற்பட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கணபதி சுப்ரமணியன், ஆடல் - பாடலில் பெண்கள் ஆபாசமாக நடனம் ஆடியதற்கான வீடியோ பதிவை நீதிபதிகளிடம் வழங்கினார். அந்த வீடியோ பதிவை பார்த்த நீதிபதி கடும் அதிருப்தி அடைந்து 'கோயில் விழாவில் இவ்வளவு ஆபாசமாக நடனம் ஆட அனுமதித்தது எப்படி? இவ்வளவு ஆபாசமாக நடனம் ஆடும்போது போலீஸார் என்ன செய்தார்கள்?' என கேள்வி எழுப்பினார்.
அரசு தரப்பில் விழா ஏற்பட்டாளர்கள் மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறி, முதல் தகவல் அறிக்கை நகலை தாக்கல் செய்தனர். அதை பார்த்ததும் நீதிபதி மேலும் கோபம் அடைந்தார்.
தொடர்ந்து நீதிபதிகள், விழா ஏற்பட்டாளர்கள் மீது சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 'இதை ஏற்க முடியாது. பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 23-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications