மதுரை இல்லொழித்தோழம் அறக்கட்டளை.. 7ம் ஆண்டு நிறைவு விழாவில் மாணவர்களுக்கு செய்யப்பட்ட உதவி!
மதுரை: இல்லொழித்தோழம் அறக்கட்டளையின் 7ஆம் ஆண்டு நிறைவு விழா திருப்பரங்குன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த ஏழு ஆண்டுகளாக மருத்துவ முகாம்கள், பழங்குடியினர் முகாம்கள், வாழ்க்கைத் திறன் பயிற்சிகள், சுய உதவிக் குழு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஆகிய சமூகப் பணிகளில் இல்லொழித்தோழம் அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த அறக்கட்டகளை தனது 8ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இதனை முன்னிட்டு அறக்கட்டளையின் 7ஆம் ஆண்டு நிறைவு விழா மதுரை திருப்பரங்குன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவுக்கு திராவிட விடுதலை கழகத்தின் தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் இல்லொழித்தோழம் அறக்கட்டளையின் முதன்மை செயல் இயக்குநர் யதிந்தர் தலைமை உரையாற்றினார்.
பின்னர் செயல்பாட்டு நிர்வாகி முகம்மது இம்ரான் ஆண்டு அறிக்கையை வாசித்தார். அறக்கட்டளையின் வழிகாட்டியும் நலவிரும்பியுமான கணேஷ்பாபு சிறப்புரை ஆற்றினார். விழாவையொட்டி, ஹரிராம் நினைவு கல்வி உதவித்தொகை ரூ.1000 மற்றும் எழுதுப்பொருள் தொகுப்புகள் மந்திக்குளம், வெளிச்சநத்தம் மற்றும் முத்துபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளிகளில் அறக்கட்டளை நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற 25 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் மூலம், இல்லொழித்தோழம் அறக்கட்டளை, கிராமப்புற சமூகங்களின் முன்னேற்றத்திற்கும், கல்வி மற்றும் விழிப்புணர்வின் மூலம் இளம் தலைமுறையை வளர்த்தெடுக்கவும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications