பேசாம வாங்க.. அதிமுகவுடன் சேருங்க.. தேமுதிக, தமாகாவுக்கு ஆதீனம் அறிவுரை
Recommended Video

மதுரை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவும், தமிழ் மாநில காங்கிரஸும் இணைய வேண்டும் என்று மதுரை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் இல கணேசன் மீனாட்சி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்தில் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதினம் பேசியாவது..

இந்திய திரு நாட்டிற்கு பெருமை சேர்த்திட, நாட்டின் பாதுகாப்பிற்காக பல்வேறு வழிகளில் செயல்படுபவர் பிரதமர் மோடி தான். தமிழகத்தில் முதல்வர், துணை முதல்வர் தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. ஆகவே தமிழக மக்கள் அதிமுக - பிஜேபி கூட்டணிக்கு ஆதரவு அளித்து வெற்றிப் பெறச் செய்ய வேண்டும்.
அதிமுக அணியில் தேமுதிக சேர வேண்டும். ஜி.கே வாசன் தமிழகம் முதல்வரையும் துணை முதல்வரையும் சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும். இந்திய நாட்டை பாதுகாக்கக் கூடியவர் பிரதமர் மோடி தான். நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி கூட்டணியை மக்கள் வெற்றிப் பெற செய்யவேண்டும்.
பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி கிடையாது. இஸ்லாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும், இந்து மக்களுக்கும் ஒன்று போல் பாவித்து நல்லது செய்து வருபவர் மோடி என்பதனை அறிந்து தான் புரிந்து தான் தெரிந்து தான் இந்தக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.
பிரதமர் மோடி அவர்களால் தான் ராணுவ வீரர் அபிநந்தன் உயிரோடு வந்துள்ளார். மோடி பிரதமராக இருப்பதால் தான் அண்டை நாடுகள் நம்மை ஆதரிக்கின்றன. நம்மைப் பார்த்துப் பயப்படுகின்றன.
ராம ஜென்ம பூமி விஷயத்தில் நியமிக்கப்பட்ட குழு நல்ல முடிவை அறிவிக்கும் என நம்புகிறோம் என்று தெரிவித்தார் ஆதீனம்
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications