மதுரையில் கோர விபத்து: காரில் இருந்த 5 பேரும் பலி! கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்!
மதுரை: மதுரை மேலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது மதுரை கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி பகுதியில் 4 வழிச்சாலையில் பக்கவாட்டு தடுப்புச் சுவரில் கார் மோதி அதில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். 3 பெண்கள், 2 ஆண்கள் என 5 பேரும் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அய்யப்பட்டி விளக்கு பகுதியையொட்டிய நான்கு வழிச்சாலையில் இன்று மாலை நடந்த பெரும் கார் விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள், மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது நான்கு உறவினர்கள் ஆவர்.

இவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திவிட்டு, மதுரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென சாலையின் பக்கவாட்டுச் சுவரில் பலமாக மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த ரமேஷ் உள்ளிட்ட இரண்டு ஆண்களும், மூன்று பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மதுரை மேலூர் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications