மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
மதுரை: தமிழக அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளதாக பரபரப்பான புகார் கிளம்பி உள்ளது. இந்த புகாரை மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ள நிலையில் இன்னும் கட்டுமான பணி தொடங்கவே இல்லை என விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவனை இன்று வரை இல்லை. இதற்கிடையே தான் கடந்த 2015ல் நம் மாநிலத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

அதன்பிறகு கடந்த 2019ல் பிரதமர் மோடி தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். 224.24 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் மருத்துவமனை அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கவே இல்லை. இதனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் ராமநாதபுரத்தில் படித்து வருகின்றனர்.
கொரோனா பரவல், ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்திடம் இருந்து வரவேண்டிய கடன் தாமதம் உள்ளிட்டவற்றால் எய்ம்ஸ் பணி தாமதமானதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் இதுதொடர்பாக திமுக மற்றும் மத்திய பாஜக அரசு இடையே பெரிய கருத்து மோதல் ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கலை தூக்கி கொண்டு தேர்தல் பிரசாரம் செய்தார்.
இதற்கிடையே தான் மதுரை எய்ம்ஸ் பணிக்கான மதிப்பீடு என்பது ரூ.1977.80 கோடியாக உயர்த்தப்பட்டது. மொத்தம் 870 படுக்கைகள் இடம்பெற உள்ளது. மேலும் 30 படுக்கையுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சைக்கான அறை, 150 எம்பிபிஎஸ் மாணவர்கள், செவிலியர்கள் படிக்கும் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளது. தங்கும் விடுதிகள் உள்ளிட்டவையும் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கியதாக போட்டோக்கள் வெளியாகின.
மேலும் எய்ம்ஸ் பணியை முழுவதுமாக 33 மாதத்தில் முடித்து 2026ம் ஆண்டில் மருத்துவமனை திறக்கப்படும் எனவும் கூறப்பட்டது. அடிக்கல் நாட்டிய 5 ஆண்டுகளுக்கு பிறகு எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் மீது பரபரப்பான புகார் எழுந்தது.
அதாவது முறையான சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே அவசர கதியில் எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளதாக புகார்கள் கிளம்பின. இது விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் முக்கிய விளக்கத்தை தந்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிர்வாம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடர்பான ஏராளமான கேள்விகள் எங்கள் அலுவலகத்துக்கு வந்துள்ளது. இதற்கு நாங்கள் விளக்கம் அளிக்க விரும்புகிறோம். அதன்படி தற்போது நடப்பது என்பது எய்ம்ஸ் கட்டுமானத்துக்கான முந்தைய ஆயத்த பணிகள் தான். தமிழக சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே கட்டுமான பணி தொடங்கும்'' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு தமிழக சுற்றுச்சூழல் அனுமதி என்பது தேவை. எய்ம்ஸ் கட்டுமானத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்த பிப்ரவரி மாதம்தான் அனுமதி கேட்டது எய்ம்ஸ் நிர்வாகம். எய்ம்ஸ் கோரிய அனுமதியை தமிழ்நாடு அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நேற்றுதான் வழங்கியது. அதன்படி இனி எய்ம்ஸ் நிர்வாகம் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும். அதன்பிறகே தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கும். இதையடுத்த தான் எய்ம்ஸ் கட்டுமான பணி முழுவதமாக தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications