இது மதுரைக்கான காலம்.. உலக நாடுகள் எல்லாம் தேடி வரப்போகுது.. ஏர்போர்ட்டில் நடந்த சுவாரசிய மாற்றம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை விமான நிலையம் இன்று முதல் 24 மணிநேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, ​​மதுரை விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமானங்கள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் புது தில்லிக்கு இயக்கப்படுகின்றன.

மதுரை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், துபாய் மற்றும் கொழும்புக்கு சர்வதேச விமான சேவைகள் உள்ளன. இருப்பினும், மதுரை விமான நிலையம் காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை செயல்படுவதால், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், 24 மணி நேரமும் விமான நிலையத்தை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது.

airport madurai airport

இந்த நிலையில் இன்று முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இரவு நேரங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களை இயக்க தனியார் விமான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இது புதிய இடங்களுக்கான விமானங்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கும். விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என்பதால், கூடுதல் சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையம்: இது போக பரந்தூர் விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த திட்டம் தீவிரமாக முன்னேறி வருகிறது. இதற்கான தொழில்நுட்ப ரீதியாக டிபிஆர் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. முதல் கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இதற்கான நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு விட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் தோற்றம் சாட்டிலைட் புகைப்படங்களில் தெளிவாக உள்ளது. சமன்படுத்தப்பட்ட நிலங்களின் தோற்றம் இதில் காணப்பட்டு உள்ளது. இதிலேயே அருகிலேயே ஒரு கோடு போன்ற அமைப்பு உள்ளது. அதுதான் பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் வே ஆகும். பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் அடுத்த வருடம் திறக்கப்படும் சாலை இதன் வழியேதான் வர உள்ளது.

airport madurai airport

சமீபத்தில் வெளியான டிபிஆர் அறிக்கையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையம் 2029 இல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பரந்தூரில் உள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையின்படி, விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஜனவரி 2026 இல் தொடங்கப்பட்டு நான்கு கட்டங்களாக உருவாக்கப்படும்.

20 மில்லியன் பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன் கொண்ட முதல் கட்டம் 36 மாதங்களில் முடிக்கப்பட்டு 2029ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். விமான நிலையத்தில் இரட்டை ஓடுபாதைகள், இருபுறமும் டாக்ஸிவே, மூன்று பயணிகள் முனையங்கள் மற்றும் பிரத்யேக சரக்கு முனையம் ஆகியவை இருக்கும். பெரிய விமானங்களை கையாளும் வகையில் இந்த விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திட்டத்திற்காக முன்பு எடுக்கப்பட இருந்த நிலத்தை விட கூடுதல் நிலத்தை கைப்பற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் இன்னும் 10 வருடங்களில் தற்போது சென்னை விமான நிலையம் இருக்கும் பகுதி அதிக நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும். இதனால் மக்கள் அதிக அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அதிக அளவில் விமானங்கள் வந்து செல்கிறது. இதனால் விமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+