தேவர் ஜெயந்தி குரு பூஜை.. டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது.. மாவட்ட ஆட்சியர்கள் வார்னிங்
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் அனைத்து மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மனமகிழ் மன்றங்கள், பார்கள் உள்ளிட்டவையும் 29, 30 ஆகிய தேதிகளில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வரும் வருகிற 30ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இன்று ஆன்மீக விழாவாக தொடங்கியுள்ளது. நாளைய தினம் முளைப்பாரி எடுத்தும் பாலபிஷேகம் செய்தும் மக்கள் வழிபடுவார்கள். ஏராளமானோர் பொங்கல் வைத்தும் மொட்டை அடித்தும் வழிபாடு நடத்துவார்கள்.

இந்நிலையில் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க ராமநாதபுரம் பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அக்.30இல் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். மேலும், குருபூஜையை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் அனைத்து மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மனமகிழ் மன்றங்கள், பார்கள் உள்ளிட்டவையும் 29, 30 ஆகிய தேதிகளில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவர் குரு பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் வரும் 30-ம் தேதியன்று முத்து ராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு வரும் 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும்
அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நாட்களில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதே போல முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி அரசு மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications