16 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஆபாச இணையதளம் பார்க்க தடை! மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆபாச இணையதளத்தை பார்க்கத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இணையதளத்தை பார்க்க தடை உள்ளது. அது போல் இந்தியாவிலும் தடை விதிக்கப்பட வேண்டும். தடை விதிக்கும் வரை சிறுவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் எஸ்.விஜயகுமார் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, "6 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆபாச இணையதளத்தை பார்க்க தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் " என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை பலரும் வரவேற்றுள்ளனர்.
தற்போது ஆன்லைன் வகுப்புகள் (பள்ளிப்பாடம் அல்ல, மற்ற வகுப்புகள்), பாடத்தில் எழும் சந்தேகங்களுக்கு சாட்ஜிபிடி பயன்படுத்த, பிராஜெக்ட்களை பார்ப்பதற்கு, கேம் விளையாட, ரீல்ஸ் பார்க்க என 16 வயதுக்குள்பட்ட குழந்தைகள் செல்போனை ஹேண்டில் செய்து வருகிறார்கள்.
அவ்வாறு செய்யும் போது அதில் ஏதேதோ வரும் விளம்பரங்களுக்குள் சென்று ஆபாச படங்களை பார்க்கும் நிலைக்குச் சென்று விடுகிறார்கள். ஒரு முறை பார்க்கும் சிலர், அந்த இணையதள முகவரியை நினைவில் வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பார்க்கும் நிலை உள்ளது.
இது அவர்களின் மனதை கடுமையாக பாதிக்கிறது. இது தவறிழைக்கவும் வழிவகுக்கும். இதனால்தான் 16 வயதுக்குள்பட்டவர்கள் சமூகவலைதளத்தை பயன்படுத்த ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்டாக் (ஆஸ்திரேலியாவில் டிக்டாக் அனுமதி) போன்ற சமூகவலைதளங்கள் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால்தான் அங்கு சமூகவலைதளத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications