Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தக திருவிழாவில் சாமி பாட்டு கேட்டதும்.. ஆவேசமாக மாணவிகள் சாமியாட்டம்.. பெற்றோர் வாக்குவாதம்

Subscribe to Oneindia Tamil

மதுரை : மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அப்போது பக்தி பாடல்கள் ஒலிக்கப்பட்ட போது அங்கு கூடியிருந்த பள்ளி மாணவிகள் சாமி ஆடத் தொடங்கி மயங்கி விழுந்தனர். இதனை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பல்வேறு தரப்பினர் அதிகாரிகளிடம் நேரில் சென்று வாக்குவாதம் செய்தனர்.

மதுரையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பபாசி ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான புத்தக திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் வருகின்ற 16ஆம் தேதி வரை நடக்கிறது

madurai book festival department of school education

புத்தகத் திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்குகள், குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ராட்டினங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், புத்தகத் திருவிழாவிற்கு வரும் அனைவரும் சுவையான, சுகாதாரமான சிற்றுண்டி உணவு வகைகளை உண்டு மகிழ உணவு அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. இந்த புத்தக திருவிழாவில் தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் "சிந்தனை அரங்கம்" நிகழ்ச்சி நடைபெற உள்ளன.

madurai book festival department of school education

புத்தகத்திருவிழா தினந் தோறும் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெறும் என அறிவித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தலைப்புகளில் பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தாண்டுக்கான புத்தக திருவிழா தமுக்கம் மைதானத்தில் தொடங்கியது. நிகழ்ச்சிக்காக மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து புத்தகத் திருவிழா தொடங்கியதும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. உள்ளூரைச் சேர்ந்த சில நாட்டுப்புற பின்னணி பாடகர்கள் மேடையில் பாடல் பாடிக் கொண்டிருந்தனர். குறிப்பாக கருப்பசாமி பாடல் பாடிய போது கருப்புசாமி வேடம் தரித்த ஒருவர் கையில் அரிவாளுடன் ஆவேசமாக மேடையில் இருந்து இறங்கி மாணவிகள் அமர்ந்திருந்த கூட்டத்திற்குள் ஆடத் தொடங்கினார்.

madurai book festival department of school education

அப்போது அங்கிருந்த மாணவிகள் திடீரென அருள் வந்தது போல் ஆவேசமாக ஆட தொடங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் அமர்ந்த நிலையில் அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் சாமி வந்து ஆடத் தொடங்கினர். இதை அடுத்து அங்கிருந்த சக மாணவிகள் அவர்களை பிடித்து இழுத்து அமர வைத்தனர். தொடர்ந்து கட்டுக் கடங்காமல் மாணவிகள் ஆடிக் கொண்டிருந்தனர்.

புத்தகத் திருவிழாவில் சாமி வேடம் போட்டு எதற்கு நடனமாடி மாணவிகளை உணர்ச்சி வயப்பட்டு சாமியாட வைக்கிறீர்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் அங்கிருந்த அதிகாரிகளுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்து வைத்த ஏற்பாட்டளர்கள், உடனடியாக சாமி பாடலை நிறுத்துமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து பல மாணவிகள் மயக்கம் அடைந்து கீழே விழுந்த நிலையில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சர்ச்சையாக பேசிய மகா விஷ்ணுவின் விவகாரம் இன்னும் முடிவடையாத நிலையில் புத்தக திருவிழாவில் சாமி பாடல் போட்டு மாணவிகளை ஆட வைத்த சம்பவமும் விமர்சனத்தை பெற்றுள்ளது.

madurai book festival department of school education
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+