அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த சம்பவம்.. மன்னிப்பு கேட்ட பேருந்து நிலைய உதவியாளர்
மதுரை: மதுரை ஆரப்பாளையத்தில் ஓட்டுனரை காலணியால் அடித்த உதவி மேலாளர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். பேருந்தை முன்கூட்டியே இயக்குவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஓட்டுனர் மீது பேருந்து நிலைய உதவி மேலாளர் காலணியால் அடித்து தாக்கிய வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி இருந்தது. இதையடுத்து அரசு பஸ் ஓட்டுனரை காலணியால் அடித்த உதவி மேலாளர் மாரிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் ஓட்டுனர் கணேசனிடமும், அரசிடமும் மன்னிப்பு கேட்டு மாரிமுத்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூருக்கு செல்ல இருந்த அரசு பஸ்சை டிரைவர் கணேசன் ஓட்ட இருந்தார். பயணிகள் பஸ்சில் ஏறிய நிலையில் பஸ் எப்போது புறப்படும் என்று டிரைவர் கணேசனிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போது இது பற்றி பேருந்து நிலைய உதவி மேலாளர் தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்துவிடம் பயணிகள் கேள்வி எழுப்பினர். அப்போது இந்த பஸ் போகாது, வேறு பஸ்சில் செல்லுங்கள் என்று மாரிமுத்து கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஏன் இதனை முதலிலேயே சொல்லியிருக்கலாமே.. இவ்வளவு நேரம் காத்திருந்த பிறகு இப்படி கூறினீர்கள் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டிருக்கிறார்கள்.
அப்போது டிரைவர் கணேசன் உதவி மேலாளர் அறைக்கு ஆவேசமாக வந்த நிலையில், திடீரென நீ தான் பயணிகளை எனக்கு எதிராக திருப்பி விடுகிறாயா என்று கேட்டு செருப்பால் தாக்கினார். இதனை பயணிகள் சிலர் வீடியோவாக எடுத்தனர். இதையடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இதன்பின்னர் அரசு ஓட்டுனரை செருப்பால் தாக்கிய சம்பவத்தில் பேருந்து நிலைய உதவியாளர் மாரிமுத்துவை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் பேருந்து நிலைய உதவியாளர் மாரிமுத்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அரசு பஸ் ஓட்டுனர் கணேசன் மற்றும் அரசிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications