மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்பிய பஸ்.. ஒரு நொடி தவறு.. நடத்துனருக்கே எமனானது
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கு அரசு பஸ் ஒன்று நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதில் கண்டக்டராக புதுக்கோட்டை மாவட்டம் விசலூர் பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் பணியில் இருந்தார். பஸ்சின் பின்பக்க படிக்கட்டு அருகே நின்றபடி நடத்துனர் கருப்பையா பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பஸ் படிக்கட்டின் தானியங்கி கதவுகள் திறந்து இருந்ததால் யாரும் எதிர்பாராத நிகழ்வு நடந்தது.
அரசு பேருந்துகளில் வைக்கப்படும் தானியங்கி கதவுகள் மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய உதவுகிறது. யாரும் படிக்கட்டில் நிற்ககூடாது என்பதற்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற உத்தரவிற்கு பிறகே நடைமுறைக்கு வந்தது. சென்னை மாநகரங்களில் உள்ள டவுன் பஸ்களில் தானியங்கி கதவுகளை தாராளமாக பார்க்க முடியும்.

முன்பு போல் இப்போது யாரும் படிக்கட்டில் தொங்கி செல்ல முடியாது. இது தான் தற்போது உள்ள நிலையாகும். அதேநேரம் மற்ற ஊர்களிலும் பேருந்துகளில் தானியாங்கி கதவுகள் பொறுத்தப்பட்டுள்ளன. என்னதான் தானியங்கி கதவால் நல்ல விஷயங்கள் நடந்தாலும், படிக்கெட்டில் செய்யும் சிறு தவறு தானியங்கி கதவால் பெரிய சிக்கலே உண்டாகும். மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளார்கள். அதில் நடத்துனராக புதுக்கோட்டை மாவட்டம் விசலூர் பகுதியை சேர்ந்த 53 வயதாகும் கருப்பையா என்பவர் பணியில் இருந்தார். அவர் பேருந்தின் பின்பக்க படிக்கட்டு அருகே நின்றபடி பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பேருந்து படிக்கட்டின் தானியங்கி கதவுகள் பூட்டப்படாமல் இருந்தன.
அந்த பஸ் மதுரை ஒத்தக்கடை அருகே நான்கு வழிச்சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய கண்டக்டர் கருப்பையா படிக்கட்டில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதனால் பேருந்தை டிரைவர் உடனடியாக நிறுத்தினார். நடத்துனர் கருப்பையாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின்னர் அவர்கள் உயிருக்கு போராடிய கண்டக்டரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கருப்பையா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications