டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம்.. உதவி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!
மதுரை: மதுரை ஆரப்பாளையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரை உதவி மேலாளர் செருப்பால் அடித்த விவகாரம் தொடர்பாக, போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் மாரிமுத்து உள்ளிட்ட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த ஜூன் 8 ஆம் தேதி அன்று இரவு திருப்பூர் செல்லும் ஒரு பேருந்தில் பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது, பேருந்து நிலைய மேலாளர் உத்தரவின்றி பேருந்தைக் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக இயக்க முடியாது. எனவே பேருந்து மேலாளரிடம் அனுமதி வாங்க வேண்டும் என பயணிகளிடம் ஓட்டுநர் கணேசன் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பயணிகளைத் தூண்டி விடுவதாகக் கூறி மேலாளர் மாரிமுத்துவுக்கும், டிரைவர் கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாரிமுத்து, ஓட்டுநர் கணேசனை காலணியால் தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மாரிமுத்துவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குநர் இளங்கோவன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக நான்கு பேர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநரை காலணியால் அடித்து அவதூறாக பேசியது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி மேலாளர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், "மதுரை போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட உதவி மேலாளராக இருந்த மாரிமுத்து பேசுகிறேன். நடந்த சம்பவத்திற்கு தாராபுரம் ஓட்டுநர் கணேசன் வசம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வசம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என்னால் தமிழக அரசுக்கும், போக்குவரத்துத் துறைக்கும் எந்த ரணமும் வர வேண்டாம். நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்குக் கட்டுப்படுகிறேன். மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் என்னுடைய மன்னிப்பைக் காணிக்கை ஆக்குகிறேன்." எனக் கை கூப்பியவாறே மன்னிப்பு கேட்டுப் பேசி இருந்தார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications