கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இன்றிலிருந்து வரும் 23ம் தேதி வரை 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி தொடங்கியது. வரும் 27ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.
தினமும் மதுரை மாநகரில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவின் 7-ம் நாளான நேற்று காலை, சுந்தரேஸ்வரர் பிச்சாடனார் ரூபத்தில் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். , இரவில் யாழி வாகனத்தில் மீனாட்சி அம்மனும், நந்தி வாகனத்தில் சுந்தரேஸ்வரர்- பிரியாவிடையுடன் எழுந்தருளியும் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இன்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நாளை மறுநாள் 21-ந்தேதி நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 22-ல் நடைபெறுகிறது.
இதற்காக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் 6.25 மணி அளவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு வையாழி ஆகி தங்கப்பல்லக்கில் கள்ளழகர், மதுரை நோக்கி புறப்பட்டு வருகிறார். அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லும் கள்ளழகர், வழியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். மொத்தம் 483 மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார்.
இந்நிலையில் மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இன்றிலிருந்து வரும் 23ம் தேதி வரை 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வைகை அணையில் 60 அடி தண்ணீர் இருப்பதால் தண்ணீர் திறப்பதில் எந்த சிக்கலும் இல்லை.
முன்னதாக மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக முறைப்பாசன அடிப்படையில் 5 நாட்கள் அணையில் இருந்து நீர் திறந்தும், 5 நாட்கள் நிறுத்தியும் வருகின்றனர். மார்ச் 12ல் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் மார்ச் 17 காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications