மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை சித்திரை திருவிழாவை காணமுடியவில்லை என வருத்தமா... மே 4-ம் தேதி ஹிஸ்டரி டிவி 18-ல் பாருங்க

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை சித்திரை திருவிழா மற்றும் மீனாட்சியம்மன் கோவில் பற்றிய ஆவணப்படத்தை வரும் மே 4-ம் தேதி ஹிஸ்டரி டிவி 18 என்ற சேனல் ஒளிபரப்புகிறது.

அதில் உலகப்புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில் மற்றும் மதுரை சித்திரை திருவிழாவின் பழங்கால வரலாற்று தகவல்கள் இடம்பெறுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு படம்பிடிக்கப்பட்ட சித்திரை திருவிழா காட்சிகள் இந்தாண்டு ஆவணப்படமாக வெளியாகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சித்திரை திருவிழா இந்தாண்டு ரத்து செய்யப்பட்டதால் அதனை காண முடியாமல் மனம் வெம்பிய மதுரைக்காரர்களுக்கு இந்த ஆவணப்படம் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Madurai Chitirai thiruvizha Documentary is airing on History Tv 18 on May 4

சித்திரை திருவிழா தோன்றிய வரலாறு மற்றும் 2 வாரக் கொண்டாட்டங்கள், வரலாற்று உண்மைகள், மீனாட்சியம்மன் கோயில் சிற்ப வேலைப்பாடுகள் உள்ளிட்டவைகள் ஆவணப்படத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், மதுரை மண்ணின் வரலாற்று தகவல்களும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறுகின்றன.

இதேபோல் பட்டாபிஷேகம், தேரோட்டம், திருக்கல்யாணம், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் காட்சிகளும் சித்திரை திருவிழா ஆவணப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உள்ளதால் இந்தாண்டு சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில், பொதுமக்களின் ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில் இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்புகிறது ஹிஸ்டரி டிவி 18.

ஆகையால் மதுரைவாசிகள் வரும் மே 4-ம் தேதி இரவு 8 மணிக்கு ஹிஸ்டரி டிவி 18-ல் இதைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

English summary
Madurai Chitirai thiruvizha Documentary is airing on History Tv 18 on May 4
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X