வேணும்னு பண்ணலைங்கய்யா.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனிடம் மன்னிப்பு கேட்ட மதுரை கலெக்டர்! முக்கிய ஆர்டர்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுத்து நாளை மறுநாள் 4 மணிக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கில் இனி மாவட்ட ஆட்சியர் ஆஜராக தேவையில்லை, நாளை மறுநாள் காவல்துறை ஆணையர் மட்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்ற நிறைவேற்றாமல் இருக்கவில்லை எனவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என ராமரவிக்குமார், அரசபாண்டி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் டிசம்பர் 1ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில் டிசம்பர் 3ல் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் மனுதாரர்கள் மலைக்கு நேரில் சென்று தீபம் ஏற்ற உத்தரவிட்டார். அதன்படி தீபம் ஏற்றச் சென்ற மனுதாரர்கள், திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை அமலில் இருப்பதாக கூறி திரும்ப அனுப்பப்பட்டனர்.

ஏற்கனவே 144 தடையாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது உறுதி செய்யப்பட்ட பிறகும், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து மதுரை ஆட்சியர் உள்ளிட்ட மீது நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மேலும், அரசபாண்டி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அவமதிப்பு செய்ததற்காக அகில இந்திய பணிகளில் (ஐஏஎஸ், ஐபிஎஸ்) உள்ள அதிகாரிகள் மீது அகில இந்திய பணி விதிகள் (நடத்தை) 1968ல் அடிப்படையில் துறைரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞரிடம் ஒரு முக்கிய கேள்வியை முன்வைத்தார். அதில், "நான் 15 நிமிடங்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் மாவட்ட ஆட்சியரிடம் பேசி, 5 நபர்கள் மட்டும் சென்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுமா? என்பதை கேட்டுச் சொல்லுங்கள்" என்று கூறினார். மேலும், மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், தற்போது நிலுவையில் உள்ள இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கத் தயாராக இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் தரப்பில், "சட்டத்தை செயல்படுத்த வேண்டியது தான் நிர்வாகத்தின் கடமை. சூழலை கருத்தில் கொண்டு தான், செயல்படுத்தப்பட்டது. சட்டத்தை கடைப்பிடித்து வருகிறேன்.பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறேன். வேண்டுமென்று கீழ்ப்படியாமல் இருக்க வேண்டும் என இல்லை. எனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். அடுத்த கார்த்திகை தீபம் வருவதற்கு முன் உரிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவிக்கப்பட்டது.
கோவில் சொத்து, இந்து சமய அறநிலையத்துறையின் சொத்து அல்ல. ஏற்கனவே ஏற்றிய இடத்தில் என்று சொல்லவில்லை, இந்துக்களுக்கு சொந்தமான பகுதியில் ஏற்ற உத்தரவு பிறப்பித்தோம்" என நீதிபதி தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரணை செய்த நீதிபதி, "நீதிமன்றம் சொல்லும் 5 நபர்களை கோவில் மலை உச்சிக்கு சென்று பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தால் இந்த வழக்கையும் முடித்து வைப்பதாக கூறி, இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுத்து நாளை மறுநாள் தெரிவிக்க உத்தரவிட்டும், நீதிபதி இந்த வழக்கில் இனி மாவட்ட ஆட்சியர் ஆஜராக தேவையில்லை, நாளை மறுநாள் காவல்துறை ஆணையர் மட்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைத்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications