கிளம்புங்க.. சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்! கூண்டோடு விலகிய திமுக புள்ளிகள்! பரபரப்பான தூங்கா நகரம்
மதுரை: மதுரை மாநகராட்சியில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு நிலவிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மேயர் இந்திராணியின் கணவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் பதவி விலகும்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர்கள் பதவி விலகி இருக்கின்றனர்.
தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகராட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் 1480 கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்தனர்.
அதில், குறிப்பாக 370 கோடி ரூபாய் சொத்து வரி என கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டதால் கூடுதலாக 250 கோடி அளவில் கிடைத்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறினர்.

தற்போதைய நிலவரப்படி, மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் சொத்து வரி கட்டும் கட்டிடங்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ 3 லட்சத்துக்கு மேல் வணிக கட்டிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கடந்த 2022 முதல் வணிக நிறுவன கட்டடங்களுக்கு, குடியிருப்பு கட்டிடங்களின் வரியை நிர்ணயம் செய்யப்பட்டு மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது என அதிமுக குற்றம் சாட்டியது. மேலும் இந்த ஊழல் தொடர்பாக நெருக்கடி அதிகமான நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், மண்டலம் மூன்றின் தலைவரின் நேர்முக உதவியாளர் தனசேகரன், உதவி வருவாய் ஆய்வாளரான குமரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ், உதவி ஆணையாளரின் உதவியாளர் கார்த்திகேயன், புரோக்கர்கள் உசேன், ராஜேஷ் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதில் திமுக மண்டல தலைவர்கள் மீதும் சந்தேகம் எழுந்தது.
இதை அடுத்து மண்டலம் மூன்றின் தலைவர் பாண்டிச்செல்வி, மண்டலம் இரண்டின் தலைவி சரவண புவனேஸ்வரி, மண்டலம் ஐந்தின் தலைவி சுவிதா ஆகியோரிடமும் அவரது கணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று மதுரைக்கு வந்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன் நேரு மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆணையர் சித்ரா விஜயன் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில் மேயர் இந்திராணி, திமுக மண்டல தலைவர்களான பாண்டி செல்வி, சரவணபவனேஸ்வரி, சுவிதா, முகேஷ் சர்மா, நகரமைப்பு வரி விதிப்பு குழு தலைவர்கள் ஆன மூவேந்திரன், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஒன் டு ஒன் என்ற பெயரில் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசி வருகிறார. இந்த நிலையில் தவறு செய்த யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுப்பேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து அவரது கணவரணத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது/ மேலும் அதிமுக நாளை மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்த நிலையில் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
புகாருக்குள்ளான அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மதுரை மாநகராட்சியின் நான்கு மண்டல தலைவர்களும், 2 குழு தலைவர்களும் ராஜினாமா செய்திருக்கின்றனர். மேலும் மதுரை மேயர் இந்திராணிக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக தற்போது பரபரப்பான தகவல் வெளியாகியிருக்கிறது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்!












Click it and Unblock the Notifications