200 கோடியை ஏப்பம் விட்ட திமுக.. விளம்பரம் தேடும் சு.வெங்கடேன் அமைதியாய் இருப்பது ஏன்? அதிமுக கேள்வி!
மதுரை: மதுரை மாநகராட்சியில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு நிலவிய நிலையில் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் பதவி விலகினர். அவர்கள் 5 பேரின் ராஜினாமாவும் ஏற்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் கடந்த நான்காண்டுகளில் பட்ஜெட்டில் ஒதுக்கிய 6,215 கோடி நிதிக்கு செய்யப்பட்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை விட வேண்டும் எனவும், மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற 200 கோடி வரி முறைகேட்டில், கூட்டணி தர்மத்திற்காக வாய் திறக்காமல் வெங்கடேசன் எம்பி மௌனமாக இருப்பது ஏன்? என அதிமுக மருத்துவரணி இணை செயளாலர் டாக்டர் சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," மதுரை மாநகராட்சியில் கடந்த 10 கால அம்மாவின் ஆட்சி காலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செய்யப்பட்டது. 2011 ஆண்டில் மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக 250 கோடியை அம்மா வழங்கினார்.
மதுரை மாநகராட்சியின் ஸ்மார்ட் திட்ட பணிகளுக்கு எடப்பாடியார் ஆயிரம் கோடி வழங்கினார். அதேபோல மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க 1,292 கோடியில் குடிநீர் திட்டத்தை வழங்கினார்.

50 கோடியில் மதுரையில் நான்கு மாசி. வீதிகளிலும் சாலைகள் பணிகள், ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம், மதுரை தெப்பக்குளத்தில் நிரந்தர தண்ணீர் தேக்கம், வைகை ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள், 300 கோடிக்கு மேல் வைகை கரைகளில் சாலை வசதி இதுபோன்று மதுரை மாநகராட்சி மட்டும் ஏறத்தாழ ஆறாயிரம் கோடி அளவில் அம்மா ஆட்சி காலத்தில் திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது இதை எங்களால் பட்டியலிட்டு சொல்ல முடியும்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சியை முதன்மை மாநகராட்சியாக மாற்றிக் காட்டுவோம் என்று மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மதுரை மாநகராட்சியை பிடித்த திமுக எந்த வளர்ச்சி திட்டத்தையும் செய்யவில்லை.
மதுரை மாநகராட்சியில் 2021-2022 ஆண்டில் 430 கோடி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது. 2022- 2023 ஆண்டில் 1,251 கோடி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது, 2023- 2024 ஆண்டில் 1,751 கோடி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது. 2024-2025 ஆண்டில் 1,296 கோடி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது, 2025- 2026 ஆண்டில் 1,480 கோடி நிதி நிலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6,215 கோடி அளவில் மதுரை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆனால் இந்த நான்காண்டுகளில் சரிவர சாலைகள் போடவில்லை.
முதலமைச்சர் மதுரைக்கு வருகிறார் என்றால் அவர் வரும் சாலை மட்டும் போடப்படுகிறது. தெருவிளக்கு பராமரிப்பு இல்லை. கடந்த நான்காண்டுகளில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் செய்த பணிகளை வெள்ளை அறிக்கையாக மக்களுக்கு விட வேண்டும். இதற்கெல்லாம் மேலே 200 கோடிக்கு மேல் வரிமுறைகேட்டை செய்துள்ளார்கள்.இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் இதுகுறித்து வாய் திறக்கவில்லை?
அதிமுகவும், பாஜகவும் தும்மினால் கூட அதற்கு குறையை கண்டுபிடித்து அதில் விளம்பரம் தேடிக் கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் இது குறித்து வாய் திறக்கவில்லை ? முதலமைச்சர் கோபித்துக் கொள்வார் என்பதற்காக வாய் திறக்கவில்லையா? அடித்தட்ட மக்களுக்கு வீட்டு வரியை உயர்த்தி விட்டு, வணிக நிறுவனங்களுக்கு வீட்டு வரியை விதித்ததுஉங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடத்தில் ஓட்டுக்களை பெற்ற நீங்கள் வாய் திறக்காமல் இருப்பது மர்மம் என்ன? என கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications