சீர்மிகு நகரம்.. CITIIS 2.0 தமிழ்நாட்டில் மதுரைக்கு அடிச்ச லக்.. ரூ.135 கோடி ஒதுக்கீடு
மதுரை: இந்திய அளவில் சீர்மிகு நகரத்திற்கான CITIIS 2.0 திட்டத்திற்கு மதுரை மாநகராட்சி தேர்வாகியுள்ளது. இந்திய அளவில் தேர்வான 18 மாநகரங்களில் தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் மதுரை மாநகராட்சிக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், CITIIS 2.0 என்னும் நகரங்களைப் புதுமைப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும், நிலைநிறுத்தவும் மேற்கொள்ளப்படும் நகர முதலீடுகள் 2.0 திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

CITIIS 2.0 என்பது பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனம் (ஏஎப்டி) , மறுகட்டமைப்புக்கான கடன் நிறுவனம் (கேஎப்டபிள்யு), ஐரோப்பிய ஒன்றியம் (இயு), தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் (என்ஐயுஏ) ஆகியவற்றுடன் இணைந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால், உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
இந்தத் திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது 2023 முதல் 2027ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும். நகர அளவில் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை, மாநில அளவில் பருவநிலை சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகள், தேசிய அளவில் நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் அறிவைப் பரப்புதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் சுழற்சி பொருளாதாரத்தை மேம்படுத்தும் போட்டித் திட்டங்களுக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கும்.
CITIIS 2.0- க்கான நிதியில், ரூ.1,760 கோடி கடன் ஐரோப்பிய யூனியன் வழங்கும் ரூ.106 கோடி ( 12 மில்லியன் யூரோ) தொழில்நுட்ப உதவி மானியம் ஆகியவை அடங்கும்.
CITIIS 1.0-இன் அனுபவம், வெற்றிகளை மேம்படுத்துவதையும் அளவிடுவதையும் CITIIS 2.0 நோக்கமாகக் கொண்டுள்ளது. CITIIS 1.0 வின் மொத்தச் செலவு ரூ. 933 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் சீர்மிகு நகரத்திற்கான CITIIS 2.0 திட்டத்திற்கு மதுரை மாநகராட்சி தேர்வாகியுள்ளது. இந்திய அளவில் தேர்வான 18 மாநகரங்களில் தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் மதுரை மாநகராட்சிக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மதுரை மாநகராட்சி இந்த திட்டத்தின் மூலம் புதுப்பொலிவு பெறப்போகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications