தலைக்கேறிய சபலம்.. பளபள நகை.. தம்பதிக்கு குறுக்கே திருமங்கலம் பெண் எஸ்.ஐ. போலீஸ்.. விழிக்கும் மதுரை
மதுரை: தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், போலீசார் இந்த விவகாரத்தில் தலையிட நேர்ந்துள்ளது. அந்தவகையில், இன்ஸ்பெக்டர் கீதாவிடம் புகார்கள் சென்றுள்ளன.. இதையடுத்து நடந்த சம்பவம்தான், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்.. இவர் சாப்ட்வேர் என்ஜினியர் ஆவார்.. இவரது மனைவி பெயர் அபிநயா.. இந்த தம்பதிக்கு சமீப காலமாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.. இதனால், இருவருமே பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

புகார்கள்: மேலும், தங்கள் பிரச்சனை தொடர்பாக, இவர்கள் இருவருமே, திருமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், புகார் அளித்திருந்தனர். இந்த புகார்கள் தொடர்பான விசாரணையை, அப்போது திருமங்கலம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கீதா என்பவர், விசாரித்து வந்தார்..
எனவே, திருமணத்திற்கு தன்னுடைய பெற்றோர் நகைகளை அளித்ததாகவும், அந்த நகைகளை ராஜேஷிடமிருந்து வாங்கித்தருமாறும் அபிநயா இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கேட்டுள்ளார்.. இதையடுத்து ராஜேஷ், தன்னிடமிருந்த 95 பவுன் நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதாவிடம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே ஒப்படைத்து விட்டார். ஆனால், இன்ஸ்பெக்டர் கீதாவுக்கு நகைகளை பார்த்ததுமே, தன்னிடமே வைத்துக் கொள்ள சபலம் துளிர்த்துள்ளது.
அந்த நகைகளை அபிநயாவிடம் தரவில்லை.. மொத்த நகையையும் தன்னிடமே வைத்துக் கொண்டு, வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
சந்தேகம்: இதனால் சந்தேகமடைந்த ராஜேஷ், திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இதுகுறித்து புகார் தந்தார்.. இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கீதாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான், அபிநயா தந்த நகைகள் அனைத்தையும் இன்ஸ்பெக்டர் கீதா தன்னிடமே வைத்திருப்பது உறுதியானது.
அதுமட்டுமல்ல, அந்த நகைகளை தன்னுடைய சொந்த தேவைக்காக, ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வைத்து ரூ.43 லட்சம் பணத்தையும் பெற்றிருப்பது தெரிய வந்தது.. இதனால் தப்பிக்க முடியாமல் ஏடாகூடமாக சிக்கிவிட்டதால், நகையை திருப்பி தருவதற்கு கால அவகாசம் கேட்டார் இன்ஸ்பெக்டர் கீதா.. அதன்படியே காலம் அவகாசம் தரப்பட்டது..
அசிங்கம்: சில நாட்களுக்கு முன்பு அடகு வைத்த நகைகளில், ஒருசிலவற்றை மட்டும் திருப்பிக்கொடுத்துள்ளார்.. ஆனால், 70 பவுனுக்கும் மேல் இன்னும் நகையை தரவில்லை.. இது தொடர்பாக தொடர்ந்து கால தாமதம் செய்து வந்த நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரித்த டி.ஐ.ஜி. ரம்யபாரதி, இன்ஸ்பெக்டர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். நகையை கடைசிவரை திருப்பித்தராத வழக்கில் இன்ஸ்பெக்டர் கீதாவை போலீசார் கைது செய்துள்ளது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications