மதுரையில் மாஸாக உருவாகி வரும் கிரிக்கெட் ஸ்டேடியம்.. மின்விளக்கு பணிகள் ஓவர்.. 3 மாதங்களில் திறப்பு?
மதுரை: மதுரையில் உருவாக்கப்பட்டு வரும் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது கேலரிக்கான மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மே மாதம் கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுடன் ஒப்பிடுகையில் மதுரை மாவட்டத்தின் வளர்ச்சி குறைந்த அளவிலேயே இருக்கும். அதிகளவிலான தொழில்கள், ஆலைகள், மத்திய அரசு நிறுவனங்கள் என்று மதுரையில் அதிகளவில் இடம்பெறவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மதுரையில் அடுத்தக்கட்ட வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே மதுரையில் டைடல் பார்க் பணிகள் தொடங்கவுள்ளது.

இதனிடையே மதுரையில் உள்ள இளைஞர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டு வந்தன. ரிங்ரோடு பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவமனை வளாகம் அருகில் இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டிலேயே கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக உருவாகி வருகிறது. 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கைகள் கொண்ட வசதி, இரு அணிகளின் வீரர்களுக்கான ஓய்வறை, அவர்களுக்கான ஜிம் வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை வசதி, கார் பார்க்கிங் வசதி உள்ளிட்டவையுடன் உருவாகி வருகிறது.
இதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதேபோல் பெங்களூர் மைதானத்தை போல் மழை பெய்தாலும் ஆட்டம் விரைவாக தொடங்கும் வகையில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மைதானத்தை சுற்றி 5 அடியளவில் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக ரூ.36 கோடி செலவில் மதுரையில் கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மைதானத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் மைதான வல்லுநர்களுடன் ஆலோசித்து ஃபிளட் லைட்ஸ் அமைக்கப்பட்டு வந்தது. இந்த பணிகள் கடந்த வாரம் முடிவடைந்துள்ளது.
தற்போது பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் கேலரிக்கான மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகள் விரைந்து முடிவடையும் பட்சத்தில், மே மாதத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த மைதானம் திறக்கப்பட்டால் டிஎன்பிஎல் மற்றும் ரஞ்சி டிராபி போட்டிகள் மதுரையில் நடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications