"டமார்".. நடுரோட்டிலேயே நுரை நுரையாய்.. துள்ளி குதித்து ஓடிவந்த குடிமகன்கள்.. மணலூரில் "மதுவெள்ளம்"
நடுரோட்டில் மணலூரில் வேன் கவிழ்ந்து மதுபானங்கள் ஆறாக ஓடியது
மதுரை: நடுரோட்டிலேயே குடிமகன்கள் பிஸியாகி விட்டனர்.. உற்சாகத்தில் துள்ளி குதித்து மதுரை ரோடெல்லாம் புரண்டனர்.. என்ன காரணம்?
மதுரையை அடுத்த மணலூர் பகுதியில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் குடோன் செயல்பட்டு வருகிறது.. இந்த குடோனில் இருந்துதான், மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லா டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும், மதுபானங்கள் அனுப்பி வைக்கப்படும்.
அதேபோல, லைசன்ஸ் பெற்ற பார்கள், லாட்ஜ்களுடன் இணைந்த பார்களுக்கு கூட, இங்கிருந்துதான் மதுபானங்கள் அனுப்பி வைக்கப்படும்.

தனியார் பார்
அந்தவகையில், மணலூர் குடோனில் இருந்து மதுரையில் உள்ள தனியார் பார் ஒன்றுக்கு மதுபாட்டில்கள் அடங்கிய சரக்கு வேன் ஒன்று மாலை நேரம் சென்றது.. அந்த வேனில், சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுப்பாட்டில்கள் அட்டைப் பெட்டிகளில் நிரம்ப அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.. வீரகனூர் சுற்றுச்சாலை அருகே நான்கு வழிச்சாலையில், சென்று கொண்டிருந்தபோது, திடீரென டமார் என வேனின் டயர் வெடித்தது..

நுரை நுரையாக வெள்ளம்
இதனால், நிலைதடுமாறி தாறுமாறாக சென்ற வேன், அங்கேயே ரோட்டோரத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதில், வேனுக்குள் இருந்த எல்லா சரக்கு பாட்டில்களும், அட்டை பெட்டிகளுடன் சாலையில் மளமளவென சரிந்து விழுந்தன... இதனால், சரக்குகள் சாலையிலேயே வெள்ளமாக ஓடியது.. நுரை நுரையாக மதுபானம் ஓடுவதை அந்த வழியாக சென்று கொண்டிருந்த மதுப்பிரியர்கள் இதை பார்த்துவிட்டு, ஓடிவந்தனர்..

டிராபிக் ஜாம்
கையில் எவ்வளவு அள்ள முடியுமோ அந்த அளவுக்கு மதுபானங்களை அள்ளினார்கள்.. இதில் அவர்களுக்குள் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.. நிறைய பாட்டில்கள் உடைந்து கொட்டி கொண்டிருந்ததால், உடையாத சரக்கு பாட்டில்களை தேடி தேடி எடுத்தனர். அந்த பாட்டில்களுக்குதான் நிறைய போட்டா போட்டி ஏற்பட்டது.. அதற்குள் அந்த பகுதி மக்களுக்கு தகவல் தெரிந்து அவர்களும் விரைந்து மெயின் ரோட்டுக்கு வந்துவிட்டனர்.. ஏற்கனவே விபத்து ஏற்பட்டு போக்குவரத்து ஜாம் ஆகியிருந்த நிலையில், குடிமகன்களின் அட்டகாசத்தினால் மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

20 ரூபாய் சரக்கு
பிறகு, தகவலறிந்து சிலைமான் போலீசார் சம்பவ இடத்தக்கு வந்தனர்.. உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர்.. அடுத்து போக்குவரத்தை சீர்செய்தனர்... அதற்குள், சம்பந்தப்பட்ட தனியார் ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் தெரிந்து அவர்களும் விரைந்துவந்து, உடையாத மதுபாட்டில்களை தேடி தேடி எடுத்தனர்.. ஆனாலும் ஏராளமான மதுபானங்கள் வீணாகி விட்டன.. கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாய் சரக்கு வீணாகிவிட்டது என்று டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பி கொண்டே இருந்தார்கள்..!












Click it and Unblock the Notifications