பரபரப்பு.. ஊழலை சுட்டி காட்டிய பாஜக பிரமுகரை.. செருப்பை கழற்றி அடிக்க பாய்ந்தாரா திமுக எம்எல்ஏ?

பெண்ணை செருப்பால் அடிக்க பாய்ந்துள்ளார் திமுக எம்எல்ஏ மூர்த்தி

Subscribe to Oneindia Tamil

மதுரை: தன் ஊழலை சுட்டிக்காட்டியதால், ஒரு பெண்ணை செருப்பை கழட்டி அடிக்க பாய்ந்து விட்டாராம் திமுக எம்எல்ஏ ஒருவர்.. மதுரையில் நடந்த இந்த சம்பவம் வீடியோவாகவே வெளிவந்து பரபரப்பை தந்து வருகிறது.

Recommended Video

    பரபரப்பு.. ஊழலை சுட்டி காட்டியவரை.. வீடு புகுந்து.. அடிக்க பாய்ந்தாரா திமுக எம்எல்ஏ?

    இவர் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் சங்கரபாண்டியன்.. மதுரை பாஜக நிர்வாகியான இவர் ஒரு டாக்டர்.. சமூக விவகாரங்களில் அளவுக்கு அதிகமாக அக்கறை காட்டி வருபவர்.. தவறு எங்கே நடந்தாலும் துணிச்சலாக சுட்டிக் காட்டுபவர்.

     madurai dmk mla moorthy beat the woman with sandals, viral video

    சில காலமாகவே மதுரை கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ மூர்த்தி ஊழலில் ஈடுபட்டதாக சில புகார்களை கூறி வந்துள்ளார்.. தன்னுடைய வீட்டு பக்கம் கண்மாய் ஒன்று காணாமல் போய்விட்டதாக மதுரை நகர் முழுவதும் சுவரொட்டி அடித்து ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் மூர்த்தி.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல முறைகேடுகளை மூர்த்தி செய்துள்ளதாகவும் சங்கரபாண்டி பல ஆதாரங்களை வெளியிட்டார்.. அதுமட்டுமில்லை, ஊழல் பணத்தில் மூர்த்தி எங்கெங்கே சொத்துக்களை வாங்கி போட்டுள்ளர் என்று நேற்று சில ஆதாரத்தையும் வெளியிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மூர்த்தி சங்கரபாண்டியன் விட்டிற்கு சென்று தகராறு செய்திருக்கிறார்.

    அதற்கு சங்கரபாண்டியனோ, "என் மீது தப்பு இருந்தால் புகார் செய்யுங்கள், வழக்கு பதிவு செய்யுங்கள்" என்று சொல்லியதாக தெரிகிறது.. இரு தரப்பிலுமே வாக்குவாதம் முற்றியுள்ளது.. ஒரு கட்டத்தில் மூர்த்தி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.. கணவனை மூர்த்தி தாக்கிவிடுவாரோ என்று பயந்துபோன சங்கரபாண்டியன் மனைவி குறுக்கே வந்துள்ளார்.

    ஆனால் மூர்த்தியோ, திடீரென தன் செருப்பை கழட்டி, அவரை ஒரு பெண் என்றும் பாராமல் அடிக்க பாய்ந்துள்ளார்.. இதெல்லாமே அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.. இவர்களுக்குள் 3 மணி நேரம் இந்த சண்டை நடந்துள்ளது.. இந்த காட்சிகள் பார்ப்பதற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் வீட்டிற்கு சென்று, அவரது மனைவியை செருப்பை கழட்டி அடிக்க பாயும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+