மதுரையில் 2 தொகுதிகள் குறி.. செளராஷ்டிரா எழுச்சி மாநாட்டில் நடந்த சம்பவம்.. குட்டையை குழப்பும் விஜய்
மதுரை: மதுரையில் செளராஷ்டிரா மக்களின் அரசியல் எழுச்சி மாநாடு புதிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக செளராஷ்டிரா மக்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வந்த சூழலில், தற்போது பாஜக ஆதரவுக்கு மாறி இருக்கின்றனர். அதேபோல் சில தொகுதிகளில் அரசியலை நிர்ணயிக்கும் இடத்திற்கு மாறியுள்ள செளராஷ்டிரா மக்கள், திடீரென அரசியல் எழுச்சி மாநாட்டை நடத்தி முடித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் செளராஷ்டிரா மக்கள் பரவி இருந்தாலும் மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமான அளவிற்கு வாழ்ந்து வருகின்றனர். மதுரையின் தெற்கு தொகுதி, திருப்பரங்குன்றம், மதுரை மத்திய தொகுதி ஆகிய 3 தொகுதிகளில் செளராஷ்டிரா மக்கள் அதிகளவில் பரவி இருக்கின்றனர். இந்த 3 தொகுதிகளிலும் செளராஷ்டிரா மக்கள் ஆதரவு இல்லாமல் வெற்றியை பெறுவது மிகவும் கடினம்.

தற்போது செளராஷ்டிரா மக்களுக்கு பெரியளவில் அரசியல் கட்சிகளில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்ற குரல்கள் எழுந்துள்ளது. இதனால் செளராஷ்டிரா மக்கள் தரப்பில் அரசியல் ஒருங்கிணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28ஆம் தேதி இதன் மாநாடும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் அத்தனை அரசியல் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு பங்கேற்றுள்ளனர்.
இன்னும் சொல்லப் போனால் சீமான் பங்கேற்றது பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே செளராஷ்டிரா மக்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வந்தனர். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின் செளராஷ்டிரா மக்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கின்றனர். அதனை சரியாக கணித்து பாஜக நிர்வாகி ராம சீனிவாசன் காய் நகர்த்தி வருகிறார்.
செளராஷ்டிரா நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக ராம சீனிவாசன் பங்கேற்று வந்தார். இப்படியான சூழலில், இம்முறை அத்தனை கட்சிகளிலும் செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த 2 பேராவது வேட்பாளர்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக மாறியுள்ளது. ஏற்கனவே அதிமுகவில் செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த சரவணன் முக்கிய முகமாக மாறி இருக்கிறார்.
ஆனால் திமுகவில் பெரியளவில் செளராஷ்டிரா முகம் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் செளராஷ்டிரா மக்கள் இன்னும் முழுமையாக ஒருங்கிணையவில்லை என்று சொல்லப்படுகிறது. தொழில்ரீதியாக சில ஒருங்கிணைப்புகள் இருந்தாலும், இளைஞர்கள் பலரும் விஜய் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இதற்கு செளராஷ்டிரா மக்களின் அரசியலும் முக்கிய காரணமாகும்.
இதனை மதுரை மாநாட்டிலேயே பார்க்க முடிந்தது. மதுரை மாநாட்டிற்கு வந்த இளைஞர்களில் கணிசமானோர் செளராஷ்டிரா இளைஞர்கள் தான். இதனை தவெகவும் உணர்ந்தே இருக்கிறது. இதனால் தவெக வேட்பாளர்கள் பட்டியலில் செளராஷ்டிரா இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் மதுரையில் திமுகவுக்கு சாதகமான நிலை உருவாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications