“மோடியின் அப்பா வந்தாலும்..” உறுதியாக சொன்ன உதயநிதி! மதுரையில் பதிலடி கொடுத்த மோடி!
மதுரை: மோடியின் அப்பாவே வந்தாலும், திமுக பயப்படாது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இந்நிலையில், மதுரை என்டிஏ பொதுக்கூட்டத்தில், உதயநிதிக்கு மோடி பதிலளித்துள்ளார்.
கடந்த 22ம் தேதி கோயம்புத்தூரில், திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 8 மாவட்டங்களிலிருந்து சுமார் 1 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மக்களிடம் இருந்து பறிக்கும் ஆட்சி பாஜக ஆட்சி, மக்களுக்கு கொடுக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. மகளிர் உரிமைத் தொகை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் நினைத்தனர். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டத்தையும் பாஜக அரசு அறிவிக்கவில்லை.
அரசியலில் முரட்டு பக்தர்கள் பார்த்திருப்போம் ஆனால் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமிதான். 2019ல் அதிமுகவை பாஜகவுக்கு அடகு வைத்த எடப்பாடி 2021ல் அதிமுகவை பாஜகவிடம் குத்தகைக்கு விட்டார். 2026ல் அதிமுகவை பாஜகவுக்கு மொத்தமாக விற்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவை அழிவுப்பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி. எம்ஜிஆர் இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமியை பார்த்து கண் கலங்கியிருப்பார். திமுகவினர் EDக்கும் பயப்படமாட்டோம். மோடிக்கும் பயப்பட மாட்டோம். மோடியின் தந்தையே வந்தாலும் அவருக்கும் திமுக பயப்படாது. திராவிடமாடல் ஆட்சியில் இருக்கும் என்ஜின் வளர்ச்சிக்கானது" என்று பேசியிருந்தார்.
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யாரும், யாருக்கும் பயப்பட தேவையில்லை என்றும், இதை பாஜக அரசு உறுதி செய்திருப்பதாகவும், இதற்கான பாராட்டாகத்தான் என் தந்தை குறித்து வந்த விமர்சனங்கள் இருப்பதாக கூறியிருக்கிறார்.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications