மட்டனில் "நீளமா" தொங்குது.. கலங்கடித்த கன்னியாகுமரி.. மலைக்க வைத்த மதுரை.. பிரபல ஓட்டலின் கிச்சனில்?
மதுரை: மதுரையில் பிரபல ஓட்டலில் நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகி உள்ளது.. இதுகுறித்த விசாரணையையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு ஏராளமான ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இதில் நிறைய ஓட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன.

10 நாட்களுக்கு முன்புகூட, மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பில், ஒரு பிரபலமான ஓட்டலில் பகீர் சம்பவம் நடந்திருந்தது.. ஒரு அதிகாரி மட்டன் ரைஸ் பார்சல் வாங்கி சென்றுள்ளார்.. வீட்டிற்கு வந்து பார்சலை பிரித்த போது, அதில் வால் முறிந்த நிலையில் பல்லி இறந்து கிடந்ததாம்.. பிறகு மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷனுக்கு பீப் ரைஸுடன் சென்று புகார் தந்தார்.
டெஸ்ட்: போலீசாரும், உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஓட்டலுக்குள் நுழைந்து, அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த அத்தனை பேரையும் உடனடியாக வெளியேற்றினார்கள்.. அந்த ஓட்டலின் கிச்சனுக்குள் சென்று, உணவையும் டெஸ்ட்டுக்காக கொண்டு போனார்கள்.
ஆனாலும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. நேற்றுகூட கன்னியாகுமரியில் மெயின் ரோட்டில் உள்ள 5-க்கும் மேற்பட்ட பிரபல ஓட்டல்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மீன், மட்டன், சிக்கன், நண்டு போன்றவை சமைத்து பயன்படுத்தாமல் ஃப்ரிட்ஜில் வைத்திருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர்.
அதிரடி சோதனை: அத்துடன், 150 கிலோவுக்கும் மேற்பட்ட பழைய மற்றும் கெட்டுபோன உணவுகளையும் அதிகாரிகள் கைப்பற்றி பினாயில் ஊற்றி அழித்தனர்... சம்பந்தப்பட்ட 5 ஓட்டல்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் சொல்லும்போது, "உணவு பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்து வழங்கினாலோ, செயற்கையான கலர் பொடிகளை சமையலில் பயன்படுத்தினாலோ அந்த ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்படும்... தரமற்ற உணவுகளை வழங்கினால், பொதுமக்கள் 9444042322 என்ற இந்த நம்பருக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
கேகே நகர்: ஆனாலும் ஓட்டல்கள் மீதான புகார்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.. இதோ மதுரையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மதுரை கேகே நகர் பகுதியில் அந்த பிரபல ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.
மதுரை சட்டக்கல்லூரி மாணவிகள் சிலர், இந்த ஓட்டலுக்கு சென்று சிக்கன் பார்சல் வாங்கியுள்ளனர்.. அதனை சாப்பிடுவதற்காக பிரித்து பார்த்தபோது அதற்குள், குட்டி குட்டியாக கருப்பாய் ஏதோ தென்பட்டுள்ளது.. உற்று பார்த்தபிறகுதான், அவைகள் வண்டுகள் என்பது தெரியவந்துள்ளது..
அதிருப்தி: சிக்கன் ரைஸில் இறந்து கிடந்த வண்டுகளை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்குச் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் அதற்கு முறையான பதில் எதுவும் சொல்லவில்லையாம.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், பார்சலில் உள்ள வண்டுகளை செல்போனில் வீடியோ எடுத்து, மதுரை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வைத்துவிட்டார்கள்.. சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிர்ச்சி: ஏற்கனவே இதே மதுரையில் சிக்கன் சாப்பிட்ட ஒருத்தருக்கு வாந்தி, மயக்கம் வந்து இறந்தே போய்விட்டார்.. இப்போது சிக்கன் ரைஸில் வண்டுகள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications